பருவநிலை மாற்றம், உக்ரேன்-ரஷ்யா போர் ஆகியவை காரணமாக உணவு விலை இவ்வாண்டு பெரிதும் பாதிப்படையும் என்று தெமாசெக் நிறுவனத்தின் நீடித்த, நிலைத்தன்மைப் பிரிவின் தலைமை அதிகாரி ஸ்டீல் ஹாவர்ட் தெரிவித்துள்ளார். இது நடுத்தர வருமானக் குடும்பங்களை அதிகம் பாதிக்கும் என்றார் அவர்.
ஏற்கெனவே நடப்பில் உள்ள விவசாய அணுகுமுறையிலிருந்து பல்வகைப்படுத்துவதன் மூலம் இந்த நெருக்குதலிலிருந்து சற்று நிவாரணம் பெறலாம் என்று டாக்டர் ஹாவர்ட் கூறினார்.
அத்துடன், துரிதமான வகையில் நீடித்த நிலைத்தன்மை உள்ள உணவு மூலாதாரங்களை உருவாக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 2013ஆம் ஆண்டிலிருந்து உணவு மற்றும் விவசாயத்தில் தெமாசெக் $8 பில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் தனக்குத் தேவையான உணவுப் பொருள்களில் 30 விழுக்காடு உணவுப்பொருள்களை உள்ளூரிலேயே தயாரிக்க சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது.
அதற்கு ஏற்ப தெமாசெக் நிறு
வனம் முதலீடுகளைச் செய்து
உள்ளது.

