பணவீக்கம் அதிகரிப்பு; உணவு வீணாகாமல் மீட்போர் எண்ணிக்கையும் கூடியது

பணவீக்கம் அதிகரிப்பு; உணவு வீணாகாமல் மீட்போர் எண்ணிக்கையும் கூடியது

1 mins read
0ce9feb9-f2d9-4005-92ed-22103076da4b
-

பண­வீக்­கம் அதி­க­ரித்து வரும் நிலை­யில், உணவு வீணா­கா­மல் அதை மீட்­போர் எண்­ணிக்­கை­யும் உயர்ந்­துள்­ளது.

கடந்த ஆறு மாதங்­களில் செங்­காங் உணவு மீட்பு அமைப்பு, ஒவ்­வொரு வார­மும் கூடு­த­லாக 15லிருந்து 20 டன் உணவை

மீட்­டுள்­ளது. அவ்­வாறு செய்­யா­மல் இருந்­தி­ருந்­தால் அந்த உண­வுப்­பொ­ருள்­கள் வீசப்­பட்­டி­ருக்­கும்.

முன்­பை­விட, கடந்த ஆறு மாதங்­களில் கூடு­தல் உணவு மீட்­கப்­பட்­ட­தாக அமைப்­பின் இணை நிறு­வ­னர் ஜெனட் லீ கூறி­னார்.

காலா­வ­தித் தேதி கடந்த பிறகு, விற்­பனை செய்ய முடி­யாத நிலை­யி­லும் கெட்­டுப் போகா­மல் இருக்­கும் உணவை மீட்­போ­ரில்

திரு­வாட்டி லீயும் ஒரு­வர்.

அவ்­வாறு மீட்­கப்­பட்ட உணவை ஏற்­றுக்­கொள்­வோ­ருக்கு அது விநி­யோ­கிக்­கப்­ப­டு­கிறது. விற்­கப்­ப­டா­மல் மிச்­ச­மா­கும் உண­வுப் பொருள்­களை தொண்­டூ­ழி­யர்­கள் எடுத்­துச் செல்ல கடைக்­கா­ரர்­கள் ஒதுக்­கி­வைப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

குடியிருப்பு வட்டாரங்களுக்கு இத்தகைய உணவுப்பொருள்களை மற்றோர் அமைப்பான ஃபிரிட்ஜ் ரீஸ்டோக் கம்யூனிட்டி எஸ்ஜியைச் சேர்ந்த தொண்டூழியர்கள் அன்றாடம் விநியோகிக்கின்றனர்.