நோவாவேக்ஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் நால்வருக்குப் பக்கவிளைவுகள்

நோவாவேக்ஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் நால்வருக்குப் பக்கவிளைவுகள்

1 mins read
0a88b977-455c-45d4-9424-d2df22fca062
-

கடந்த மே மாதம் 31ஆம் தேதி நில­வ­ரப்­படி, நோவா­வேக்ஸ் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டோ­ரில் நால்­வ­ருக்­குப் பின்­வி­ளை­வு­கள் ஏற்­பட்­டன.

ஆனால், அவர்­கள் யாரும் மோச­மாக நோய்­வாய்ப்­ப­ட­வில்லை என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு சொறி, நெஞ்­சு­வலி, தலை சுற்­றல் போன்ற பிரச்­சி­னை­கள் ஏற்­பட்­டன. அவர்­களில் எவ­ரும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

மே மாதம் மொத்­தம் 2,792 நோவா­வேக்ஸ் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டி­ருந்­தன. மே 18ஆம் தேதி­யி­லி­ருந்து நோவா­வேக்ஸ் தடுப்­பூசி போடப்­பட்டு வரு­கிறது.

நோவா­வேக்ஸ் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­வர்­களில் எவ­ருக்­கும் இத­யத் தசை வீக்­கம் ஏற்­பட்­ட­தாக இது­வரை தக­வல் இல்லை.