பாலஸ்டியர் சாலையில் தீ

செவ்வாய்க்கிழமையன்று (28 ஜூன்) பாலஸ்டியர் சாலையின் ஒரு பகுதியில் தீ மூண்டது.

529 பாலஸ்டிர் ரோட் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

தீயணைப்பாளர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருவதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது.

குடிமைத் தற்காப்பு அதிகாரிகள் வருவதற்கு முன்னரே கட்டடத்திலிருந்து 10 பேர் வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டது. 

யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தெரியவில்லை.

529 பாலஸ்டியர் ரோட்டில் உள்ள கட்டடத்தில் அனைத்துலக மாணவர்களுக்கான ஒரு தங்குவிடுதி, மொழிகள் கற்றுத்தரும் துணைப்பாட நிலையம் ஆகியவை உள்ளன.

முதல் மாடியில் விளக்குகள் விற்கும் கடை, உணவகம் உள்ளிட்டவை இருக்கின்றன.

பிற்பகல் 1.45 மணியளவில் பெரிய சத்தம் கேட்டதாக அருகில் வேலை செய்யும் ஒருவர் கூறினார்.

பிற்பகல 4.30 மணிக்கு சம்பவ இடத்திற்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சென்றபோது குறைந்தது எட்டு தீயணைப்பாளர்கள் விளக்குக் கடை மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்துக்கொண்டிருந்தனர்.

சம்பவ இடத்தில் சுமார் எட்டு தீயணைப்பு வாகனங்களும் ஐந்து காவல்துறை வாகனங்களும் நின்றுகொண்டிருந்தன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!