அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை புரிந்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர்

அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை புரிந்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர்

1 mins read

ஒரு பெண்ணின் அடுக்குமாடி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரிடம் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக ஒரு 47 வயது ஆடவர் சந்தேகிக்கப்படுகிறார்.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகச் சொல்லப்படும் அந்தப் பெண்ணின் மீது வழுக்கி தவறுதலாக விழுந்ததாக அந்த ஆடவர் காவல்துறை அதிகாரியிடம் கூறியிருக்கிறார்.

சந்தேக நபரான சிங்கப்பூரர் யாப் பாவ் ஃபூவின் நீதிமன்ற விசாரணையின் முதல் நாளான ஜூன் 28ஆம் தேதியன்று இந்த விவரம் தெரியவந்தது.

பாலியல் வன்கொடுமை புரிந்தது, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி அதிகாலையில் அவர் வாசல் கதவுக்குக்கீழ் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வீட்டுக்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை புரிந்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சீனாவைச் சேர்ந்த 39 வயது பெண்ணின் சம்மதத்துடன் தான் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக யாப் கூறி வருகிறார்.