சிங்கப்பூரின் நீர் நிர்வாகம் எரிசக்தியையே பெரிதும் சார்ந்துள்ளது என்பதால் நீருக்கான தேவையையும் நீர்ச் சூழமைப்புக்கான செயலாற்றையும் ஆதரிக்க பசுமை எரிசக்தி அவசியம்.
அதனை உருவாக்க மிதக்கும் சூரிய மின்தகடுகளை அமைக்கவேண்டிய தேவை எழுந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக நீரை மறுசுழற்சி செய்யவும் கட்டுபடியான விலையில் அதிகத் தண்ணீரை உற்பத்தி செய்யவும் நுண்வடிகட்டி முறை உதவிவந்தது.
ஆனால், அது சிங்கப்பூரின் எரிசக்தி மீள்திறன் ஆதரவைச் சார்ந்துள்ளது என்றார் அவர்.
போர்ச்சுகலின் தலைநகர் லிஸ்பனில் நடைபெறும் ஐநா பெருங்கடல் ஆதரவு மாநாட்டில் டாக்டர் விவியன் பங்கேற்றுப் பேசினார்.
அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு லிஸ்பன் சென்றிருக்கும் அவர், சனிக்கிழமை (2 ஜூலை) வரை அங்கிருப்பார்.
தண்ணீர் தொடர்பாக அங்கு நடைபெற்ற அமைச்சர்நிலை வட்டமேசை உயர்மட்டக் கூட்டத்திற்கு இணைத் தலைமை ஏற்று டாக்டர் விவியன் பேசினார்.

