'முன்னேறும் சிங்கப்பூர்': ஆலோசனை திரட்டவுள்ள 4ஜி அமைச்சர்கள்

'முன்னேறும் சிங்கப்பூர்' வருங்காலத் திட்டத்திற்காக 4ஜி எனும் நான்காம் தலைமுறை அமைச்சர்கள் சிங்கப்பூரர்களிடமிருந்து ஆலோசனைகளையும் கருத்துகளையும் சேகரிப்பர்.

துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தலைமையில் இந்த முயற்சி ஓராண்டுக்கு மேற்கொள்ளப்படும்.

அதன் மூலம் மக்களின் அக்கறைகளைப் புரிந்துகொண்டு அவர்களின் கருத்துகளைச் சேகரித்து சட்ட திட்டங்களில் மாற்றங்களைச் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும்.

வருங்காலத்தில் எழக்கூடிய சவால்களை எதிர்கொண்டு சிங்கப்பூரை ஒற்றுமையான சமுதாயமாக வைத்திருப்பது இலக்கு.

'முன்னேறும் சிங்கப்பூர்' வருங்காலத் திட்டத்தின்கீழ் ஆறு பிரிவுகளில் சிங்கப்பூரர்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் சேகரிக்கப்படும்.

'வலுப்படுத்துதல்: பொருளியலும் வேலைகளும்', 'ஆற்றலளித்தல்: கல்வியும் வாழ்நாள் கற்றலும்', 'பராமரித்தல்: சுகாதாரமும் சமூக ஆதரவும்', 'உருவாக்குதல்: இல்லமும் வாழும் சூழலும்', 'வழிநடத்துதல்: சுற்றுச்சூழலும் நிதி நிலைத்தன்மையும்', 'ஒன்றிணைத்தல்: சிங்கப்பூர் அடையாளம்' ஆகியவை அந்த ஆறு பிரிவுகள்.

'வலுப்படுத்துதல்: பொருளியலும் வேலைகளும்' பிரிவை மனிதவள அமைச்சர் டான் சீ லெங், தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் இங் சீ மெங், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் ஆகியோர் வழிநடத்துவர்.

'ஆற்றலளித்தல்: கல்வியும் வாழ்நாள் கற்றலும்' பிரிவை கல்வி அமைச்சர் சான் சுன் சிங், தற்காப்பு மற்றும் மனிதவள மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, தொடர்பு, தகவல் மற்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ் ஆகியோர் வழிநடத்துவர்.

'பராமரித்தல்: சுகாதாரமும் சமூக ஆதரவும்' பிரிவு சுகாதார அமைச்சர் ஓங் யி காங், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சரும் சுகாதார இரண்டாம் அமைச்சருமான மசகோஸ் ஸுல்கிஃப்லி, நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா ஆகியோரால் வழிநடத்தப்படும்.

'உருவாக்குதல்: இல்லமும் வாழும் சூழலும்' பிரிவை தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, வெளியுறவு மற்றும் தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் ஆகியோர் வழிநடத்துவர்.

'வழிநடத்துதல்: சுற்றுச்சூழலும் நிதி நிலைத்தன்மையும்' பிரிவு நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, நாடாளுமன்ற நாயகர் டான் சுவான்-ஜின், நிதி மற்றும் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் ஆகியோரால் வழிநடத்தப்படும்.

'ஒன்றிணைத்தல்: சிங்கப்பூர் அடையாளம்' பிரிவை கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்விங் டோங், கல்வி, வெளியுறவு இரண்டாம் அமைச்சர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான், சுகாதார மற்றும் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி ஆகியோர் வழிநடத்துவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!