புதிதாக 11,504 பேருக்குக் கிருமித்தொற்று

புதிதாக 11,504 பேருக்குக் கிருமித்தொற்று

1 mins read
dc1e23cf-8be0-4de5-849d-ceaeedce8b00
-

சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமையன்று (28 ஜூன்) புதிதாக 11,504 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் கூடுதல் எண்ணிக்கையில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகும்.

வாராந்திர கிருமித்தொற்று விகிதம் 1.62க்கு அதிகரித்தது.

உள்ளூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் 9,989 பேருக்கு 'ஏஆர்டி' பரிசோதனையின் மூலம் கிருமித்தொற்று இருந்தது தெரியவந்தது.

இவர்கள் நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவர்கள் அல்லது மோசமாக நோய்வாய்ப்படாதவர்கள் என்று மருத்துவர்களால் நிர்ணயிக்கப்பட்டவர்கள்.

உள்ளூரில் கிருமித்தொற்றுக்கு ஆளான 743 பேருக்கு 'பிசிஆர்' பரிசோதனையின் மூலம் கிருமித்தொற்று இருந்தது தெரியவந்தது.

கிருமித்தொற்றுக்கு ஆளான எஞ்சிய 772 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.