பாலஸ்டியர் சாலையில் உள்ள கட்டடம் ஒன்றில் நேற்று தீ மூண்டது. 529 பாலஸ்டியர் சாலையில் அமைந்துள்ள அக்கட்டடத்தில் மாணவர் விடுதியும் துணைப்பாட நிலையமும் உள்ளன.
அதுமட்டுமின்றி கட்டடத்தின் தரைத்தளத்தில் கடைகளும் இருக்கின்றன. அவற்றில் விளக்குக் கடையான நியூ பாலஸ்டியர் லைட்டிங்கும் ஹவுஸ் ஆஃப் தௌசார் பியா எனும் பிரபல சீனப் பலகாரக் கடையும் அடங்கும்.
நேற்று மாலை 4.30 மணி அளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது குறைந்தது எட்டு
தீயணைப்புப் படையினர் அந்த விளக்குக் கடைக்குள் தண்ணீர் பீய்ச்சியடித்துக் கொண்டிருந்த தாகத் தெரிவிக்கப்பட்டது.
விளக்குக் கடையிலிருந்தும் கட்டடத்தின் கூரையிலிருந்தும் கரும்புகை கிளம்பியதாகச் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
பிற்பகல் 2 மணி அளவில் விளக்குக் கடை
யிலிருந்தும் கூரையிலிருந்தும் புகை வெளியானதைக் கண்டதாக அக்கட்டடத்துக்கு எதிரே இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்தில் தற்காப்புக் கலை பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றும் 28 வயது திரு இக்னேஷியஸ் கோல்மன் அலெக்சாண்டர் கூறினார்.
"விளக்குக் கடைக்குப் பக்கத்தில் உள்ள உடற்பிடிப்பு நிலையத்திலிருந்து சிலர் வெளியே ஓடி வருவதை நான் பார்த்தேன்.
பிற்பகல் 1.45 மணி அளவில் விளக்குக் கடைக்குள் ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டதாக அருகில் உள்ள கடை ஒன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு ஏறத்தாழ எட்டு தீயணைப்பு வண்டிகளும் ஐந்து காவல்துறை வாகனங்களும் அனுப்பிவைக்கப்பட்டன.
தீச்சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அருகில் உள்ள சாலைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க காவல்துறை அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர்.
விளக்குக் கடையில் மூண்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

