சிங்கப்பூரின் முதல் மின்சாரப் பந்தய கார்

சிங்கப்பூரின் முதல் மின்சாரப் பந்தய கார்

1 mins read
9cdafde7-a2cb-4079-8155-c2c10fd31693
18 மாத உழைப்பில் உருவான மின் பந்தய கார் 'ஆர்22இ'. படம்: சாவ் பாவ் -

சிங்கப்பூர் தேசி­யப் பல்­க­லைக்­கழகத்­தின் பொறி­யி­யல் மாண­வர்­கள் மின்­சா­ரத்­தில் இயங்­கும் சிங்­கப்­பூ­ரின் முதல் பந்­தய காரை உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

இந்த காரின் இயந்­தி­ரத்தை இயக்­கத் தொடங்­கிய 3.9 விநா­டி­களில் மணிக்கு 100 கிலோ­மீட்­டர் வேகத்தை எட்­டும் என்று கூறப்­படு­கிறது.

'டெஸ்லா', 'ஆடி' உள்­ளிட்ட சில மின்­சார கார்­கள் இத்­த­கைய வேகத்தை எட்­டும் என்று தக­வல்­கள் கூறு­கின்­றன. 'ஆர்22இ' என்று அழைக்­கப்­படும் இந்த காரை போக்கு­ வ­ரத்து மூத்த துணை­ய­மைச்­சர் சீ ஹொங் டாட் நேற்று அதி­கா­ர­பூர்­வ­மாக அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். இதன் அதி­க­பட்ச வேகம் மணிக்கு 125.4 கிலோ­மீட்­டர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.