தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் மேம்பட்ட சிறுநீரக சிகிச்சை முறை

1 mins read
54a46bd9-3249-4d20-8da3-5368ad7fca60
-

சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் சிறு­நீ­ரக செய­லி­ழப்­பால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு அதிக சிர­மம் தராத வகை­யில் மேம்­பட்ட சிகிச்சை முறை ஒன்று தற்­போது சோதிக்­கப்­ப­டு­கிறது.

சிறு­நீ­ர­கம் செய­லி­ழந்­தால் 'டயா­லி­சிஸ்' எனப்­படும் ரத்­தத்­தைச் சுத்­தி­க­ரிக்­கும் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வது வழக்­கம். ஆனால் இதற்கு முன்­ன­தாக நோயா­ளி­கள் ஓர் அறு­வைச் சிகிச்­சைக்­குச் செல்­ல­வேண்­டும்.

நோயா­ளி­யின் ரத்­தத்தை செயற்­கை­யான சிறு­நீ­ர­கம் போன்ற கருவி சுத்­தி­க­ரிப்­ப­தற்கு ஏது­வாக அவ­ரது உட­லில் இருந்து ரத்­தத்தை எடுத்து அனுப்ப, கையின் மேற்­ப­கு­தி­யில் ஓர் இடத்­தில் துளை­யிட நேரி­டும்.

நரம்­பை­யும் ரத்­தக் குழா­யை­யும் இணைத்து அதன் வழியே ரத்­தம் செல்­லும்­படி அமைக்க இது உத­வும். ஆனால் இதற்கு பயந்­து­கொண்டு நோயா­ளி­கள் சிலர் 'டயா­லி­சிஸ்' சிகிச்­சையை நிரா­க­ரிப்­ப­துண்டு.

புதிய சிகிச்சை முறை­யில் ஊசி­க­ளைச் செலுத்தி, 'அல்ட்ரா சவுண்ட்' எனப்­படும் மிகை­ஒலி முறை­யில் நரம்­பை­யும் ரத்­தக் குழா­யை­யும் இணைக்­க­லாம்.

அல்­லது காந்­தங்­கள் பொருத்­தப்­பட்ட ஊசி­களை நரம்­பி­லும் ரத்­தக் குழா­யி­லும் செலுத்தி பின்­னர் அவற்றை இணைக்­க­லாம் என்று கூறப்­பட்­டது.

பாரம்­ப­ரிய அறு­வைச் சிகிச்சை முறை­யில் இந்த இணைப்­பிற்கு 45 முதல் 90 நிமி­டங்­கள் பிடிக்­கும். புதிய முறை­யில் 15 நிமி­டங்­க­ளுக்­கும் குறை­வான நேரத்­தில் இது சாத்­தி­யம். அத்­து­டன் இந்த முறை­யில் அறு­வைச் சிகிச்­சைத் தழும்­பும் ஏற்­ப­டாது என்பது சிறப்பு.