கல்வி அமைச்சின் மூன்று புதிய பாலர் பள்ளிகள்

கல்வி அமைச்சின் மூன்று புதிய பாலர் பள்ளிகள்

2 mins read
f50b5658-3806-46eb-be35-8a6beadf8daa
அறிவியல் செய்முறை நடவடிக்கையில் ஈடுபடும் கல்வி அமைச்சின் நார்த்ஷோர் பாலர் பள்ளி மாணவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கல்வி அமைச்­சின் மூன்று புதிய பாலர் பள்­ளி­கள் 2026, 2027ஆம் ஆண்­டு­களில் தெங்கா, செங்­காங், அங் மோ கியோ வட்­டா­ரங்­களில் உள்ள தொடக்­கப்­பள்ளி வளா­கங்­களில் திறக்­கப்­படும்.

இவற்­றை­யும் சேர்த்து கல்வி அமைச்­சின் பாலர் பள்­ளி­க­ளின் எண்­ணிக்கை 60ஆக உய­ரும்.

பைனி­யர் தொடக்­கப்­பள்ளி 2026ல் தெங்கா வட்­டா­ரத்­திற்கு இட­மாற்­றம் செய்­யப்­ப­டும்­போது, அங்கு கல்வி அமைச்­சின் பாலர் பள்ளி திறக்­கப்­படும்.

செங்­காங் வட்­டா­ரத்­தில் உள்ள ரிவர்­வேல் தொடக்­கப்­பள்­ளி­யி­லும் அங் மோ கியோ வட்­டா­ரத்­தில் உள்ள டவுன்ஸ்­வில் தொடக்­கப்­பள்­ளி­யி­லும் 2027ஆம் ஆண்டு புதிய பாலர் பள்­ளி­கள் திறக்­கப்­படும்.

ஒவ்­வொரு பாலர் பள்­ளி­யி­லும் மாண­வர்­க­ளுக்கு 120 முதல் 200 இடங்­கள் ஒதுக்­கப்­படும்.

கல்வி அமைச்­சின் 60 பாலர் பள்­ளி­க­ளுள் 43 பள்­ளி­கள் செயற்­பாட்­டில் உள்­ளன. மீத­முள்ள 17 பள்­ளி­கள் 2023க்கும் 2027க்கும் இடைப்­பட்ட காலத்­தில் திறக்­கப்­படும். இத­னால், 2027ல் பாலர் பள்­ளி­களில் சேரும் முத­லாம் ஆண்டு மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை 8,300ஆக உய­ரும்.

2026, 2027ஆம் ஆண்­டு­களில் திறக்­கப்­படும் பாலர் பள்­ளி­க­ளுக்­குப் பதிவு செய்ய விரும்­பு­வோர் அப்­பள்­ளி­கள் திறக்­கப்­ப­டு­வ­தற்கு முந்­தைய ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் பதிவு செய்­து­கொள்­ள­லாம்.

மேல் விவ­ரங்­கள் 2025, 2026ஆம் ஆண்­டு­க­ளின் முற்­ப­கு­தி­யில் வெளி­யி­டப்­படும்.

ஐந்து, ஆறு வய­துள்ள மாண­வர்­க­ளுக்கு, கட்­டுப்­ப­டி­யா­கும் கட்­ட­ணத்­தில் தர­மான கல்­வியை வழங்கு­வது மட்­டு­மல்­லா­மல் குழந்­தைப் பரு­வக் கல்வி செயல்­மு­றை­க­ளின் தரத்தை உயர்த்­து­வ­தும் இந்­தப் பாலர் பள்­ளி­க­ளின் நோக்­கம்.

கல்வி அமைச்­சின் அனைத்­துப் பாலர் பள்­ளி­க­ளி­லும் சீனம், மலாய், தமிழ் ஆகிய மூன்று தாய்­மொ­ழி­கள் கற்­பிக்­கப்­படும்.

தொடக்­கத்­தி­லேயே இரு­மொழிக் கல்­வியை ஊக்­கு­விப்­ப­தை­யும் பிற்­கா­லத்­தில் மொழி­க­ளைக் கற்­ப­தற்­கான அடித்­த­ளத்தை உரு­வாக்­கு­வ­தை­யும் இலக்­கா­கக் ­கொண்டு பாலர் பள்­ளி­களில் தாய்­மொ­ழி­கள் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன.

தொடக்­கப்­பள்­ளி­களில் அமைந்­துள்ள கல்வி அமைச்­சின் பாலர் பள்­ளி­களில் பயி­லும் மாண­வர்­களுக்கு அந்­தந்த தொடக்­கப் பள்­ளி­க­ளி­லேயே நேர­டிச் சேர்க்கை வழங்­கப்­படும்.

இத­னால், பிள்ளைகள் பாலர் பள்­ளி­யி­லி­ருந்து தொடக்­கப்­பள்­ளிக்­குச் செல்­லும்­போது ஏற்­படும் நிலை மாற்­றம் சுமு­க­மாக இருக்­கும் என்று கருதப்படுகிறது.