விவியன்: பசுமை எரிசக்திக்கு மிதக்கும் சூரிய மின்தகடுகள்

விவியன்: பசுமை எரிசக்திக்கு மிதக்கும் சூரிய மின்தகடுகள்

2 mins read
9d75761a-d164-4171-aa76-8c09818ba815
தெங்கா நீர்த்தேக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சூரியத்தகடு மின்னழுத்தத் தொழில்நுட்பக் கட்டமைப்பு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் நீர் நிர்­வா­கம் எரி­சக்­தி­யையே பெரி­தும் சார்ந்துள்ளது என்­ப­தால் நீருக்கான தேவை­யையும் நீர்ச் சூழமைப்புக்கான செயலாற்றையும் ஆதரிக்க பசுமை எரிசக்தி அவசியம். அதனை உரு­வாக்­க­ மிதக்­கும் சூரிய மின்­த­க­டு­களை அமைக்­க­வேண்­டிய தேவை எழுந்­துள்­ள­தாக வெளி­யு­றவு அமைச்­சர் விவி­யன் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்து உள்­ளார்.

கடந்த பதி­னைந்து ஆண்­டு

­க­ளாக நீரை மறு­சு­ழற்சி செய்­ய­வும் கட்­டுப்­ப­டி­யான விலை­யில் அதி­கத் தண்­ணீரை உற்­பத்தி செய்­ய­வும் நுண்­வ­டி­கட்டி முறை உதவி வந்­தது. ஆனால், அது சிங்­கப்­பூ­ரின் எரி­சக்தி மீள்­தி­றன் ஆத­ர­வைச் சார்ந்துள்­ளது என்­றார் அவர்.

டாக்­டர் விவி­யன் போர்ச்­சுக்­

கீ­சி­யத் தலை­ந­கர் லிஸ்­ப­னில் நடை­பெ­றும் ஐநா பெருங்­க­டல் ஆத­ரவு மாநாட்­டில் பங்­கேற்­றுப் பேசி­னார். அதி­கா­ரத்­துவ வருகை மேற் கொண்டு லிஸ்­பன் சென்­றி­ருக்­கும் அவர், சனிக்­கி­ழமை வரை அங்­கி­ருப்­பார்.

தண்­ணீர் தொடர்­பாக அங்கு நடை­பெற்ற அமைச்­சர்­நிலை வட்­ட­மேசை உயர்­மட்­டக் கூட்­டத்­திற்கு இணைத் தலைமை ஏற்று டாக்­டர் விவி­யன் பேசி­னார்.

"தற்­போது 1,000 லிட்­டர் கடல்­நீ­ரைக் குடி­நீ­ராக்க, கன மீட்­ட­ருக்கு 3.5 கிலோ­வாட் என்ற அள­வில் மின்­சா­ரம் செல­வி­டப்­ப­டு­கிறது. இதனை 2 கிலோ­வாட் ஆகக் குறைப்­ப­தற்­கான திட்­டங்­களில் சிங்­கப்­பூர் பணி­யாற்றி வரு­கிறது," என்­றார் அவர்.

தெங்கா நீர்த்­தேக்­கத்­தில் அமைக்­கப்­பட்டுள்ள மிதக்­கும் சூரி­யத் தகடு மின்­ன­ழுத்­தத் தொழில்­நுட்­பக் கட்டமைப்பை அவர் உதா­ர­ண­மா­கச் சுட்­டி­னார். அந்த மின்­த­க­டு­கள் 60 மெகா­வாட் மின்­சா­ரம் தயா­ரிக்­கும் வல்­லமை பெற்­றவை.

நூறு விழுக்­காடு முழு­மை­யான பசுமை நீர்­வள முறை­யைக்­கொண்­டி­ருக்­கும் சில நாடு­களில் சிங்­கப்­பூ­ரும் ஒன்று என்­றார் டாக்­டர் விவி­யன். உல­கின் ஆகப்­பெ­ரிய உள்­நாட்டு மிதவை சூரி­யத்­த­கடு மின்­மு­றை­யைக் கொண்ட பகு­தி­களில் தெங்கா நீர்த்­தேக்க அமைப்­பும் ஒன்று.

அமைச்­சர் விவி­யன் கூறு­கை­யில், "இது வெறும் பசுமை சம்­பந்­தப்­பட்­டது மட்­டு­மல்ல. நமது நீர்­

வ­ளத் தேவைக்­கான எரி­சக்தி அனைத்­தை­யும் உற்­பத்தி செய்­யும்­போது அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய பாது­காப்பு மற்­றும் மீள்தி­றன் தாக்­கங்­களும் உள்­ள­தைக் கவ­னிக்க வேண்­டும்.

"தண்­ணீ­ருக்­கான சரி­யான விலை­யைப் பெறு­வ­தும் மற்­றோர் ஆற்­றல்­மிக்க நீர் நிர்­வா­கம். சரி­யான விலை இன்றி முறை­யான நீர்ப் பங்­கீட்­டைச் செய்ய முடி­யாது. விலையை நிர்­ண­யம் செய்­வ­தற்­கான சிங்­கப்­பூ­ரின் நீண்­ட­கால அணு­கு­முறை என்­பது, தனி­யார் துறைப் பங்­கா­ளித்­து­வத்­திற்கு நீண்­ட­கால உத்­த­ர­வா­தம் இருப்­பதை உறு­தி­செய்­கிறது. சிங்­கப்­பூ­ரில் 200க்கும் மேற்­பட்ட நீர் நிர்­வாக நிறு­வ­னங்­களும் 25 நீர் ஆய்வு நிலை­யங்­களும் உள்­ளன.

"சிங்­கப்­பூ­ரில் ஒரே அமைச்­சின்­கீழ் நீர் நிர்­வா­கம் செய்­வ­தற்­கான ஒருங்­கி­ணைந்த அணு­கு­முறை உள்­ளது. இதன் கார­ண­மாக, தண்­ணீர் விநி­யோ­கம் தொடங்கி, பயன்­ப­டுத்­தப்­பட்ட தண்­ணீர் மீட்பு, வடி­கால், வெள்­ளம், கட­லோ­ரப் பாது­காப்பு போன்­றவை வரை ஒவ்­வொரு துளி நீரை­யும் பெற்று, பயன்­ப­டுத்தி, மறு­ப­ய­னீடு செய்­வ­தற்­கான ஆற்­றல் கிடைக்­கிறது," என்­றார் அமைச்­சர்.