புதிய வர்த்தகச் சூழல்: கடைக்காரர்கள் கவனம் செலுத்த வலியுறுத்து

புதிய வர்த்தகச் சூழல்: கடைக்காரர்கள் கவனம் செலுத்த வலியுறுத்து

2 mins read
5c02226d-3f73-46ee-af8d-61e25013ecb8
-

கடை­களில் பொருள் வாங்­கு­வோ­ரின் விருப்­பங்­கள் மாறி­வ­ரு­வ­தால் குடியிருப்பு வட்டாரங்களில் உள்ள கடை­கள் புதிய வர்த்­த­கப் போக்­கு­க­ளைச் சந்­திப்­ப­தில் சவால்­களை எதிர்­நோக்க வேண்டிவரும். கொள்­ளை­நோய் கார­ண­மாக கடந்த ஈராண்­டு­கள் கடைக்­கா­ரர்­க­ளுக்­குச் சிர­ம­மாக இருந்­த­

போ­தி­லும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் மாற்­றப்­போக்­கால் அவர்­க­ளின் சிர­மம் மேலும் அதி­க­ரிக்­கும் நிலை உள்­ளது என்று தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ கூறி­யுள்­ளார்.

சிங்­கப்­பூர் குடியிருப்பு வட்டார நிறு­வன உச்­ச­நி­லைக் கூட்­டத்­தில் பங்­கேற்று அவர் பேசி­னார்.

"கொள்­ளை­நோய்க்­குப் பின்­னர் நிறைய வாடிக்­கை­யா­ளர்­கள் இணைய வர்த்­த­கத்­துக்கு மாறி­

வ­ரு­கி­றார்­கள். இன்­னும் சில வாடிக்­கை­யா­ளர்­கள் நவீ­ன­ம­ய­மிக்க கடைத்­தொ­கு­தி­க­ளுக்­குச் செல்­லத் தொடங்கி இருக்­கி­றார்­கள். குடியிருப்பு வட்டாரங்களில் உள்ள கடைக்­கா­ரர்­கள் இந்­தப்­போக்­கைக் கவ­னத்­தில் கொண்டு தொடர்ந்து நீடித்து நிலைக்க முய­ல­வேண்­டும்," என்­றார் திரு லீ.

இது­போன்ற நிலை­மை­யைச் சமா­ளித்து உதவ ஆய்வு ஒன்று கடந்த ஆண்டு தொடங்­கப்­பட்­டது. அவ­ர­வர் பகு­தி­களில் உள்ள கடை­கள் தங்­க­ளது தனித்­தன்­மையை இழக்­கா­மல் புத்­தாக்­கத்தை எவ்­வாறு கடைப்­பி­டிக்­க­லாம் என்று ஆய்­வில் பங்­கேற்ற சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டம் கேட்கப்பட்டது.

திரு லீ மேலும் கூறு­கை­யில், "இது­போன்ற கடை­கள் உள்­ளூர் சமூ­கங்­களில் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன. அக்­கம்­பக்­கத்­ தாரு­டன் சமூ­கப் பிணைப்பை வலு­வாக்­கு­வ­தில் இவை உத­வு­கின்­றன. மேலும், தங்­க­ளது வீட்­டுக்கு அரு­கி­லேயே வேலை செய்ய விரும்­பும் மூத்­தோ­ருக்­கும் மற்­ற­வர்­க­ளுக்­கும் இவை வேலை வழங்கி உத­வு­கின்­றன," என்­றார்.

நேர்­கா­ணல்­கள் வழி­யா­க­வும் கருத்­துத் திரட்­டல்­கள் வழி­யா­க­வும் 2,800க்கும் மேற்­பட்­டோர் ஆய்­வில் கலந்­து­கொண்­ட­னர். குடி­யி­ருப்­பா­ளர்­கள், கடைக்­கா­ரர்­கள், வர்த்­த­கத் தலை­வர்­கள் ஆகி­யோர் இந்த எண்­ணிக்­கை­யில் அடங்­கு­வர்.

அதிக உற்பத்தித்திறனுடன் திகழ மின்­னி­லக்­கத்­துக்கு மாறு­தல், சந்­தைப்­ப­டுத்­து­தல் போன்­ற­வற்­றில் இது­போன்­ற கடை­களுக்கு ஆத­ரவு வழங்­கப்­பட வேண்­டும் என்று இவர்­களில் சிலர் கூறி­னர்.

இது­போன்ற கருத்­து­களை அர­சாங்­கம் ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் இது­தொ­டர்­பான பரிந்­து­ரை­கள் வரும் மாதங்­களில் வெளி­யி­டப்­படும் என்­றும் திரு லீ கூறி­னார்.

"மாறி­வ­ரும் வர்த்­த­கச் சூழல்­

க­ளைக் கடைப்­பி­டிப்­பது சில கடைக்­கா­ரர்­க­ளுக்கு எளி­தாக இல்­லா­விட்­டா­லும் வேறு­சி­லர் அதனை வெற்­றி­க­ர­மா­கக் கடைப்­பி­டிக்­கி­றார்­கள்.

"இன்­னும் சில கடைக்­கா­ரக்­கார்­கள் அனைத்­து­லக அள­வில் முன்னேறியுள்ளனர். 'ஓல்ட் சாங்க் கீ' இதற்கு ஓர் உதா­ர­ணம். 1956ல் ரோச்­சோர் அருகே மெக்­கன்ஸி ரோடு காப்­பிக்­க­டை­யில் சிறிய கடை­யாக தொடங்­கப்­பட்ட இந்­நி­று­வ­னம் இங்கு கிளைகளை அமைத்ததோடு ஜகார்த்தா, லண் டன், பெர்த் என முன்னேறி உள்ளது," என்றார் திரு லீ