ஊழியரணியில் இடம்பெற்று வாழ்நாள் கற்றலில் ஆர்வம் காட்டுவோருக்கு சரியான திறன்களையும் மனப்போக்கை யும் கொண்ட ஆற்றல்மிக்க பயிற்றுநர்கள் தேவைப்படுவார் கள் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறினார்.
ஆறாவது அனைத்துலகத் தொழில்நுட்ப, நிபுணத்துவக் கல்வி மற்றும் பயிற்சி மாநாட் டில் கலந்துகொண்டு பேசிய அவர், வருங்காலத்தில் பயிற்றுநர்களுக்கு எவ்வித ஆற்றல் தேவைப்படும் என் பதை விளக்கினார்.
"வேகமாக மாறிவரும் சூழலுக்கேற்ற தேவைகளைப் பூர்த்திசெய்யும் சரியான திறன் களை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
"அடுத்ததாக, வாழ்நாள் கற்றலில் ஈடுபடுவோருக்கு தனிமயமான கற்றல் அனுபவத்தைத் தரும் வகை யில் சரியான உபகரணங்கள் அவர்களுக்குத் தரப்பட வேண்டும்.
"மூன்றாவதாக, கல்வியாளர் கள் சரியான மனப்போக்கைக் கொண்டிருத்தல் வேண்டும். கற்றுக்கொடுக்கும் அதேநேரம் தங்களைத் தாங்களே மறு பயிற்சிக்கு உட்படுத்தி மேம் பாடு காணவேண்டும்," என்று திரு சான் தெரிவித்தார்.

