செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4785107e-783a-4d64-a739-97dcf2ac6579
-

ஒரேநாளில் 11,504: இரட்டிப்பான கொவிட்-19 சம்பவங்கள்

சிங்கப்பூரில் நேற்று புதிதாக 11,504 கொவிட்-19 சம்பவங்கள் பதிவாயின. இது திங்கட்கிழமை பதிவான 5,309 சம்பவங் களைக்காட்டிலும் இருமடங்கு. மேலும், கடந்த செவ்வாய்க் கிழமை 7,109 என்று பதிவான கொவிட்-19 சம்பவங்களைக் காட்டிலும் நேற்றைய எண்ணிக்கை அதிகம். மற்ற வாரநாள் களோடு ஒப்பிடுகையிலும் இது அதிகம். வாரயிறுதியில் பல்வேறு சமூக நிகழ்வுகளில் அதிகமானோர் பங்கேற்பதால் தொற்று அதிகரிப்பதை இது உணர்த்துவதாக சுகாதார அமைச்சு கூறியது.

இணைய வர்த்தக மோசடி; கைது

கார் உதிரிபாகங்கள் விற்பனை என்ற பெயரில் இணைய வர்த்தக மோசடியில் ஈடுபட்ட 28 வயது ஆடவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாங்கள் ஏமாற்றப் பட்டது தொடர்பாக பலரிடமிருந்து கடந்த மார்ச் மாதம் முதல் இம்மாதம் வரை புகார்கள் கிடைக்கப்பெற்றதாகக் காவல்துறை நேற்று தனது அறிக்கையில் கூறியது. கார் உதிரிபாகங்களை விற்பதாக இணையத்தில் விளம்பரம் செய்த ஆடவர், அந்த பாகங்களை வாங்க இணைய வங்கி மூலம் பணம் செலுத்தியவர்களுக்கு அவற்றை விநியோகம் செய்யத் தவறினார். இதேபோன்ற வேறு சில குற்றச் செயல்களிலும் ஆடவர் ஈடுபட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை கூறியது. அந்த ஆடவர் மீது நேற்று குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். இணையம் வழியாகப் பொருள் வாங்கு வோர் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து மட்டுமே வாங்குமாறு, குறிப்பாக உயர் மதிப்புள்ள பொருள் களை வாங்கும்போது கவனத்துடன் நடந்துகொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டு உள்ளது. மேலும், பொருள் விநியோகம் செய்யப்படும் போது பணம் செலுத்தும் நடை முறையைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.