சிறந்தநிலைக்குத் தேர்வுசெய்யப்பட்ட போர்ப்படைகள்; சாதனையின் பின்னணியில் படைவீரர்களின் உழைப்பு, அர்ப்பணிப்பு

முத­லாம் மின்­னற்­படை பட்­டா­ளம் தொடர்ந்து 19 ஆண்­டாக சிறந்த போர்ப் படைக்­கான போட்­டி­யில் வெற்­றி­பெற்­றுள்­ளது. இப்­பட்­டா­ளம் இது­வரை 36 முறை இப்­போட்­டி­யில் வெற்றி கண்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை ஒவ்­வோர் ஆண்­டும் நடத்­தும் சிறந்த படை­க­ளுக்­கான போட்­டி­யில் சிறந்த ஆகா­யப் படை­யாக 143ஆம் விமா­னப் போர்ப்படை, சிறந்த போர்க் கவ­ச­ வா­க­னப் படை­யாக 474ஆம் போர்க் கவ­ச­ வா­க­னப் படை ஆகி­ய படை­களும் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளன.

முத­லாம் மின்­னற்­படைப் பட்­டா­ளத்­தைச் சேர்ந்த கார்­ப்ப­ரல் நட­ரா­ஜன் பிரேம்­சே­கர், 20, தற்­போது இச்­சா­தனை பெரு­மை­ய­ளித்­தா­லும் அதற்­காகப் பாடு­பட்­ட­போது மிக­வும் கடி­ன­மாக இருந்­த­தெனக் கூறி­னார். தேசிய சேவை­யா­ள­ரான இவர், சோத­னை­யை­விட அதற்­கான பயிற்­சி­கள் மிக­வும் சோர்­வ­ளித்­த­தாகக் கூறி­னார். காடு­களில் உட­லை­யும் மன­தை­யும் வருத்­தும்­ப­டி­யான பயிற்­சி­களில் ஈடு­பட்­டது, அப்­போது சற்று சிர­ம­மா­கத் தோன்­றி­னா­லும் இப்­போது மகிழ்ச்­சி­ய­ளிப்­ப­தாகத் தெரி­வித்­தார்.

ஐந்து நாட்­கள் கடி­ன­மாக உழைத்­து­விட்டு வார இறு­தி­களில் வீடு திரும்­பு­கை­யில், ஓய்வு எடுப்­ப­தி­லேயே பெரும்­பா­லான நேரம் செல­வா­கி­விடுவதால், தன் குடும்­பத்­தா­ரு­ட­னும் நண்­பர்­க­ளு­ட­னும் நேரம் செல­விட முடி­யா­மல் போனது வருத்­த­ம­ளிப்­ப­தாக கூறி­னார் பிரேம்­சே­கர்.

ஆனால், தற்­போது இந்த அங்­கீ­கா­ரம் பெற்­றது அத்­த­கைய தியா­கங்­க­ளுக்கு அர்த்­தம் அளிப்­ப­து­போல் தோன்­று­வ­தாக இவர் குறிப்­பிட்­டார்.

இவர் பங்­கேற்ற போர்ப் பயிற்சி, காய­ம­டைந்­த­வர்­களை வெளி­யேற்­றும் பயிற்சி போன்­ற­வை தன்னை உட­லள­வி­லும் மன­த­ள­வி­லும் திடப்­

ப­டுத்­தி­யுள்­ள­தாக பிரேம்­சே­கர் கூறி­னார்.தமது அடிப்­படை விமானப் பயிற்­சி­யி­லும் சிறப்பு விமானப் பயிற்­சி­யி­லும் சிறந்த மாணவ விமா­னி­யா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட கேப்­டன் அக்‌ஷய் சர்மா, 31, மூன்று ஆண்­டு­க­ளாக தனது விமா­னப் போர்ப் படை சிறந்த படை­யா­கத் தேர்­வு­பெற்றுவரு­வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்­ப­தாக கூறி­னார்.

இச்­சோ­தனை தனது படை­யின் பறக்­கும் திற­னை­யும் வல்­ல­மை­யை­யும் சோதித்­த­தா­க­வும், அதற்கு பயிற்சி பெற பல மாதங்­கள், வீரர்­கள் பலர் பயிற்சி செய்­த­தா­க­வும் இவர் குறிப்­பிட்­டார்.

இந்­தச் சோத­னைக்­காக ஆயத்­தப்­ப­டுத்­திக்­கொள்­ளும்­போது, தானும் தனது படை உறுப்­பி­னர்­களும் தங்­க­ளுக்­கி­டை­யி­லான சகோ ­த­ரத்­து­வத்தை வளர்த்­துக்­கொண்­ட­தாக அக்‌ஷய் கூறி­னார். திறன்மிக்க விமா­னப் போர்ப் படை­க­ளு­டன் போட்­டி­யிட்டு வெல்ல நல்ல திட்­ட­மைப்பு முக்­கி­ய­மாக அமைந்­த­தென்­றும் இவர் பகிர்ந்­துக்­கொண்­டார்.

சிறந்த போர் கவ­ச­ வா­க­னப் படை­யாகத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 474ஆம் போர் கவ­ச­ வா­க­னப் படை­யைச் சேர்ந்த போர்க்­கால படை­வீ­ரர், லெப்­டி­னென்ட் நாக­ரா­ஜன் ராதா, 30, தமது உயர் அதி­கா­ரி­யின் பொறுப்­பைப் பூர்த்தி செய்ய வேண்­டிய நிலை ஏற்­பட்­ட­தால், தான் சிறிது சிர­மங்­களை எதிர்­நோக்­கி­ய­தாக கூறி­னார்.

தமது உயர் அதி­காரி தனிப்­பட்ட கார­ணங்­க­ளி­னால் இத்­தேர்­வில் பங்­கேற்க முடி­யா­மல் போன­தா­க­வும் அதன் விளை­வாக தாம் அப்­ப­ணியை எடுத்துச் செய்ய வேண்­டிய சூழல் ஏற்­பட்­ட­தா­க­வும் இவர் கூறினார். ஆனால், தமது படையினரும் உயரதிகாரிகளும் தமக்கு ஆதரவு வழங்கி பணியைச் சிறப்பாகச் செய்ய உதவியதாக இவர் கூறினார்.

இவ்வாறு எதிர்பாரா சூழ்நிலை கள் பல ஏற்பட்டாலும் அதை வெற்றி கரமாகப் பூர்த்தி செய்து, இந்த அங்கீ காரத்தைப் பெறுவது திருப்தியளிப்ப தாக இவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!