ஓரினச் சேர்க்கையாளர்கள் மீது வழக்குத் தொடுப்பதில்லை என்பது சிங்கப்பூரில் உள்ள நிலை என்று பிபிசி ெசய்தியாளர் ஸ்டிவன் சாக்கர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் பதில் அளித்துள்ளார்.
சமூகத்தின் மனப்போக்கு மாறிவருவதால் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இந்தச் சட்டத்தை ரத்து செய்ய விரும்பவில்லை என்பதால் இத்தகைய அணுகுமுறை எடுக்கப்பட்டு உள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார்.
ஓரினச் சேர்க்கையாளர்களை தண்டிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டப் பிரிவு 377ஏ பற்றி சாக்கர் கேள்வி எழுப்பினார்.
சமூக மனப்பான்மையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டால் இந்தச் சட்டம் விலக்கிக் கொள்வதை எதிர்பார்க்கலாமா என்றும் அவர் கேட்டார்.
தற்போது இதற்கு இறுதியான பதிலைத் தர முடியாத நிலையில் இருப்பதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இனவாதம் குறித்தும் சாக்கர் கேள்வி கேட்டார்.
இதற்குப் பதில் கூறிய அமைச்சர், இனவாதம் சிங்கப்பூரில் இல்லை என்று கூறுவதற்கில்லை. பெரும்பாலான சமூகத்தில் இருப்பது போன்று இங்கும் உள்ளது என்றார். ஆனால் எந்த அளவுக்கு இனவாதம் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். சிறுபான்மை யினராக என்னுடைய சொந்த அனுபவத்திலும் மற்றவர்களின் அனுபவத்திலும் மொத்தமாக பார்த்தால் இதர சமூகங்களுடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் இது மிகவும் குறைவு," என்று அவர் குறிப்பிட்டார்.

