பணிப்பெண்ணை துன்புறுத்தி கொன்ற வழக்கு; குற்றவாளியின் மேல்முறையீடு நிராகரிப்பு

பணிப்பெண்ணை துன்புறுத்தி கொன்ற வழக்கு; குற்றவாளியின் மேல்முறையீடு நிராகரிப்பு

2 mins read
150be073-b89a-4811-9afe-2ccaa6da77f2
காயத்திரி (இடம்), துன்புறுத்தலால் மரணமடைந்த மியன்மார் பணிப்பெண் பியாங் ஙியா டோன். கோப்புப் படங்கள் -
multi-img1 of 2

மியன்­மார் பணிப்­பெண் இறக்­கும் அள­வுக்கு துன்­பு­றுத்­திய காயத்­திரி முரு­கை­ய­னின் வேண்­டு­கோளை நீதி­மன்­றம் நிரா­க­ரித்­து­விட்­டது.

முப்­பது ஆண்­டு­கால சிறைத் தண்­ட­னையை அனு­ப­வித்து வரும் அவர், தண்­ட­னை­யைக் குறைக்­கும்­படி கேட்டு மனுத் தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

தனக்கு விதிக்­கப்­பட்ட தண்­டனை அதி­கப்­ப­டி­யா­னது என்­றும் 12 முதல் 15 ஆண்டு சிறைத் தண்­டனை ஏற்­பு­டை­யது என்­றும் மனு­வில் அவர் கூறி­யி­ருந்­தார்.

ஆனால் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் அவ­ரது மனுவை நிரா­க­ரித்­து­விட்­டது.

ஓராண்­டுக்கு முன்பு தண்­டனை விதித்த உயர் நீதி­மன்ற நீதி­பதி தான் மன­ந­லம், மன அழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­ததை கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்ளத் தவ­றி­விட்­டார் என்று 42 வயது காயத்­திரி வாதிட்­டார்.

பணிப்­பெண்ணை துன்­பு­றுத்­திய குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கும் தனது தாயா­ரான 63 வயது பேமா எஸ். நாரா­ய­ண­சா­மிக்கு தண்­டனை விதிப்பது விரைவுபடுத்தப்படும் என்று எண்ணி குற்­றத்தை ஒப்­புக்­கொள்ளும் மன அழுத்­தத்­திற்கு உள்­ளா­ன­தாக அவர் கூறி­னார்.

அவ­ரது தாயார் மீதான வழக்கு இன்­ன­மும் நிலு­வை­யில் உள்­ளது.

தண்டனை விதித்த உயர் நீதி மன்ற நீதிபதி காயத்திரியின் நடத்தையையும் மனநலத்தையும் கவனமாக பரிசீலித்ததாக நீதிபதி ஆண்ட்ரு பாங் குறிப்பிட்டார்.

"பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு எதி­ரான தனது நடத்­தையை இதன்­மூ­லம் அவர் நியா­யப்­ப­டுத்த முயற்சி செய்­கி­றார்.

"காயத்­தி­ரியை வழக்­க­றி­ஞர் ஒரு­வர் பிர­தி­நி­தித்­துள்­ளார். இத­னால் குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள தான் அழுத்­தத்­திற்கு உள்­ளா­ன­தாக அவர் கூறு­வ­தற்­குப் போது­மான ஆதா­ரம் இல்லை," என்று நீதி­பதி பாங் தெரி­வித்­தார்.

சிறை­யில் பெரும்­பா­லா­ன­வர் களை­விட தனது மன­நிலை கார­ண­மாக அதி­கம் அவ­திப்­ப­டு­வ­தா­க­வும் அவர் கூறு­வதை நீதி­மன்­றம் ஏற்றுக் கொள்­ள­வில்லை.

சிறை­யில் தான் முறை­யாக நடத்­தப்­ப­ட­வில்லை என்­றும் மேல்­மு­றை­யீட்­டில் காயத்­திரி புகார் கூறி­யி­ருந்­தார். ஆனால் இதற்­கும் தண்­டனை விதிப்­புக்­கும் தொடர்பு இல்லை என்று நீதி­மன்­றம் விளக்­கம் அளித்­தது.

மியன்­மார் நாட்­டைச் சேர்ந்த 24 வயது பணிப்­பெண்ணை பட்­டினி போட்டு துன்­பு­றுத்­தி­ய­தற்­காக கடந்த ஆண்டு ஜூனில் காயத்­தி­ரிக்கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

நோக்­க­மற்ற மர­ணம் விளை­வித்த குற்­றச்­சாட்டு உட்­பட தன் மீது சுமத்­தப்­பட்ட 28 குற்­றச்­சாட்­டு­களை அவர் ஒப்­புக் கொண்­டார்.

அவர் மீதான இதர 87 குற்­றச்­சாட்­டு­களும் தண்­டனை விதிப்­பின்­போது கவ­னத்­தில் எடுத்­துக் கொள்­ளப்­பட்­டன.

2015 மே 28ஆம் தேதி­யி­லி­ருந்து பணிப்­பெண் அவ­ரது வீட்­டில் வேலை செய்­யத் தொடங்­கி­னார்.

நாற்­பது விழுக்­காடு உடல் எடையை இழந்த பணிப்ெ­பண் 2016 ஜூலை 26ஆம் தேதி இறந்தார்.

அப்போது அவ­ரது எடை 24 கிலோ­வுக்கு குறைந்திருந்தது.