சிங்கப்பூரின் வெளிநாடு தலையீட்டுக்கு எதிரான சட்டம் அரக்கத்தனமானது என எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற தனிப்பட்ட அமைப்பு கூறுவதை சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் முற்றிலும் நிராகரித்துள்ளார்.
அந்த அமைப்பின் கூற்று முட்டாள்தனமானது என்றார் அவர்.
பேச்சு சுதந்திரத்தின் உண்மையான பாரம்பரியத்தில் நாங்கள் சிறப்புக்குழு விசாரணைக்கு அவர்களை அழைத்திருந்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை என்று அவர் கூறினார்.
உலகளாவிய அரசியல் பற்றி கேட்டபோது, நாங்கள் எந்தத் தரப்பினரையும் தேர்ந்தெடுக்க வில்லை என்று திரு சண்முகம் சொன்னார்.
இந்த விவகாரத்தில் எங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைப் பின்பற்றுகிறோம் என்று அவர் கூறினார்.

