உடற்குறையுள்ளோருக்கான போக்குவரத்து மானியம் அதிகரிப்பு

உடற்குறையுள்ளோருக்கான போக்குவரத்து மானியம் அதிகரிப்பு

2 mins read
5c76269c-91b9-483b-9e53-ff5d01c11eec
மானிய உயர்வால் அரசாங்கம் ஆண்டுக்கு இரண்டு மில்லியன் வெள்ளி கூடுதலாகச் செலவிடும்.படம்: எரிக் சுவா/ ஃபேஸ்புக் -

சிறப்­புத் தேவை­யு­டை­யோ­ருக்­கான பள்­ளி­க­ளுக்­கும் சமூ­கத் திட்­டங்­களுக்­கும் சென்­று­வ­ரு­வ­தற்­கான சிறப்­புப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­படுத்­து­வோர் நாளை முதல் குறை­வான கட்­ட­ணத்­தைச் செலுத்­தி­னால் போது­மா­னது.

'இடி­எஸ்' எனப்­படும் 'எனே­பி­லிங் டிரான்ஸ்­போர்ட்' மானி­யம் உயர்த்­தப்­ப­டு­வது இதற்­குக் கார­ணம். இத­னால் மூவா­யி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோர் பல­ன­டை­வர் என்று கரு­தப்­ப­டு­கிறது.

மானி­யத் தொகை கிட்­டத்­தட்ட 20 விழுக்­காடு உயர்த்­தப்­ப­டு­வ­தால் அர­சாங்­கத்­துக்கு ஓர் ஆண்­டில் இரண்டு மில்­லி­யன் வெள்ளி கூடு­த­லா­கச் செல­வா­கும் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

அக்­கறை மிக்க அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சமு­தா­ய­மாக சிங்­கப்­பூரை அமைக்­கும் நோக்­கு­டன் வகுக்­கப்­பட்ட 'எனே­பி­லிங்' பெருந்­திட்­டம் 2030ன் ('இஎம்பி2030') ஓர் அங்­க­மாக மானி­யத் தொகை உயர்த்­தப்­ப­டு­வ­தாக அமைச்சு கூறி­யது. ஒருங்­கி­ணைந்த சமு­தா­யத்­திற்கு முழு­மை­யா­கப் பங்­க­ளிக்­கும் விதத்­தில் உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்கு வலு­வூட்­டு­வது இத்­திட்­டத்­தின் நோக்­கம் என்று அமைச்­சின் மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ள­ரும் 'இஎம்பி2030' வழி­காட்­டிக் குழு­வின் தலை­வ­ரு­மான எரிக் சுவா ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டுள்­ளார்.

மானி­ய உயர்வால், 800 வெள்ளி வரை தனி­ந­பர் மாத வரு­மா­னம் ஈட்­டும் குடும்­பத்­தைச் சேர்ந்த சக்­கர நாற்­காலி பயன்­ப­டுத்­தும் ஒரு­வர், நாளை முதல் 170 வெள்ளி போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­ணம் செலுத்­தி­னால் போதும். தற்­போது இவர்­கள் 280 வெள்ளி கட்­ட­ணம் செலுத்­து­கின்­ற­னர்.

தனிநபர் மாத வருமானம் $2,800 வரை ஈட்டும் குடும்­பத்­தைச் சேர்ந்த சக்­கர நாற்­காலி பயன்­ப­டுத்­தும் ஒரு­வர், இனி 40 வெள்ளி குறை­வாக 410 வெள்ளி மட்­டுமே செலுத்­து­வர்.

இத்­த­கை­யோர் பொதுப் போக்­கு­வ­ரத்­துச் சலு­கைக் கட்­டண அட்­டைக்­கும் விண்­ணப்­பிக்­க­லாம்.

இந்த அட்­டை­யைப் பயன்­ப­டுத்தி 7.2 கிலோ­மீட்­ட­ருக்­கும் குறை­வான தொலை­விற்கு 25 விழுக்­காட்­டுச் சலு­கைக் கட்­ட­ணத்­தில் இவர்­கள் பய­ணம் செய்­ய­லாம்.

பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்த இய­லா­தோர் டாக்சி மானி­யத்­திற்கு விண்­ணப்­பம் செய்­ய­லாம். டாக்சி அல்­லது தனி­யார் வாடகை காரில் பள்ளி, வேலை­யி­டம், வேலை­வாய்ப்­புப் பயிற்­சி இடம் ஆகி­ய­வற்­றுக்­குச் சென்­று­வர 80 விழுக்­காட்­டுக் கட்­ட­ணச் சலுகை இவர்­க­ளுக்கு வழங்­கப்­படும்.