மூத்தோர் 'பூஸ்டர்' தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்து

மூத்தோர் 'பூஸ்டர்' தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்து

1 mins read
56b61c03-f1fb-48f0-9dc1-282c30d362fa
-

அர­சாங்­கத்­தின் அதி­கா­ர­பூர்வ 'வாட்ஸ்­அப்' தக­வல்­வ­ழி­யான 'கவ்.எஸ்ஜி' மூத்­தோர் 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

60ம் அதற்கு மேலும் வய­தா­ன­வர்­கள் உட­ன­டி­யாக முதல் 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­யைச் செலுத்­திக்­கொள்­ளும்­ப­டி­யும் 80ம் அதற்கு மேலும் வய­தா­ன­வர்­களும் மருத்­து­வக் கார­ணங்­க­ளால் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டி­யோ­ரும் இரண்­டா­வது 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளும்­ப­டி­யும் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

முதல் 'பூஸ்­டர்' செலுத்தி ஐந்து மாதங்­க­ளான பிறகு இரண்­டா­வது 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம். நேற்று 'வாட்ஸ்­அப்' தக­வல்­வ­ழி­யில் வெளி­யான இந்த ஆலோ­சனை அர­சாங்­கத்­தின் 'டெலி­கி­ராம்' பக்­கத்­தி­லும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

50 முதல் 79 வய­தா­னோர் இரண்­டா­வது 'பூஸ்­டர்' தடுப்­பூசி குறித்­துப் பரி­சீ­லிக்­க­லாம்.

சிங்­கப்­பூ­ரில் 60 வய­தும் அதற்­கும் மேற்­பட்ட கிட்­டத்­தட்ட 70,000 பேர் இன்­னும் முதல் 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­வில்லை.