அரசாங்க அதிகாரிகளிடம் பொய்யுரைத்தவருக்குச் சிறை

அரசாங்க அதிகாரிகளிடம் பொய்யுரைத்தவருக்குச் சிறை

1 mins read
686aecf6-0cfc-403f-861a-f11c247983e6
-

டென்­மார்க்­கைச் சேர்ந்த கிளாஸ் நிகோ­லஜ்­சென், தன் மனை­வி­யி­டம் மூச்­சுக் காற்­றில் மது­பா­னத்­தின் அளவை மதிப்­பி­டும் சோத­னையை நடத்­த­வந்த அதி­கா­ரி­க­ளி­டம் தவ­றான தக­வல் அளித்­த­தற்­காக அவ­ருக்கு ஒரு வாரச் சிறைத்­தண்டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ­ரது மனைவி லியு சியா, 2019ஆம் ஆண்டு அக்­டோ­பர் 19ஆம் தேதி நண்­பர்­க­ளு­டன் 'செந்­தோசா கோல்ஃப் கிளப்'பில் மது அருந்­தி­விட்டு இரவு ஒன்­ப­தரை மணி­ய­ள­வில் காரில் வீடு திரும்­பி­னார். வழி­யில் ஆலன்­பு­ரூக் ரோட்­டில் விளக்­குக் கம்­பத்­தில் அவர் மோதி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

மறு­நாள் இது­கு­றித்து விசா­ரிக்­கச் சென்ற காவல்­துறை அதி­கா­ரி­க­ளி­டம் மனைவி வீட்­டில் இல்லை என்­றும் 'ஹாலந்து வில்­லேஜ்' சென்­றி­ருப்­ப­தா­க­வும் நிகோ­லஜ்­சென் பல­முறை பொய் சொன்­னார்.

பொய் கூறி­யதை நீதிமன்றத்தில் ஒப்­புக்­கொண்ட அவர் தண்­டனை குறித்து மேல்­மு­றை­யீடு செய்­யப்­போ­வ­தா­கக் கூறப்­பட்­டுள்­ளது.