1,100 கள்ள சிகரெட் பெட்டிகள் பறிமுதல்: நால்வர் கைது

1,100 கள்ள சிகரெட் பெட்டிகள் பறிமுதல்: நால்வர் கைது

1 mins read
77b539b3-218d-42e1-a144-c7972ee35ca5
படம்: சிங்கப்பூர் சுங்கத் துறை ஆணையம் -
multi-img1 of 3

சாய் சீ வட்டாரத்தில் தீர்வை செலுத்தப்படாத 1,100 கள்ளச் சிகரெட் பெட்டிகள் சிக்கின. இதன் தொடர்பில் மூன்று ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைதுசெய்யப்பட்டனர். ஆடவர்களில் இருவர் சீன நாட்டினர். கைதுசெய்யப்பட்டவர்கள் 25 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகள் சாய் சீ வட்டாரத்தில் உள்ள வாரிங்கின் பார்க்கில் மேற்கொண்ட சோதனையில் கள்ளச் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு வேனுக்கும் ஒரு வாகனத்துக்கும் இடையே பழுப்பு நிற பெட்டிகளை சந்தேக நபர்கள் மாற்றுவதை அதிகாரிகள் கண்டனர். சோதனையிட்டதில் கள்ள சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதோடு, அந்த இரண்டு வாகனங்களும், சீன நாட்டினரிடம் இருந்த $6,300 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிகரெட்டுகளுக்கு செலுத்தப்படாத ஒட்டு மொத்த வரியின் மதிப்பு $93,940 என்றும் செலுத்தப்படாத பொருள், சேவை வரியின் மதிப்பு $7,490 என்றும் ஆணையம் குறிப்பிட்டது.

குற்­றங்­கள் நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்­ற­வா­ளிக்கு சம்­பந்­தப்­பட்ட பொருள்­க­ளுக்குச் செலுத்­த­வேண்­டிய வரிக் கட்­ட­ணங்­களில் 40 மடங்கு தொகை அப­ரா­த­மாக விதிக்­கப்­ப­ட­லாம். மேலும், ஆறாண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.