சுகாதாரப் பராமரிப்புச் சேவையின் தரத்தை உயர்த்தும் இலக்குடன் 2,500 பேரிடம் ஆய்வு

சுகாதாரப் பராமரிப்புச் சேவையின் தரத்தை உயர்த்தும் இலக்குடன் 2,500 பேரிடம் ஆய்வு

2 mins read
65a66d9c-2a5c-4c7a-8e1c-71f418703619
-

சிங்­கப்­பூ­ரின் வடக்­குப் பகு­தி­யில் வசிக்­கும் 2,500 குடி­யி­ருப்­பா­ளர்­

க­ளி­டம் தேசிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புக் குழு­மத்தின் ஓர் அங்கமான ஈசூன் ஹெல்த் ஆய்வு நடத்­து­கிறது. இந்த ஆய்வு இம்­மா­தம் தொடங்கி டிசம்­பர் மாதம் நிறை­வு­பெ­றும்.

மண்­டாய், செம்­ப­வாங், சிம்­பாங், உட்­லண்ட்ஸ், ஈசூன் ஆகிய வட்­டா­ரங்­களில் வசிப்­போ­ரில் 2,500 பேரி­டம் இந்த மக்­கள்­தொகை சுகா­தார ஆய்வு நடத்­தப்­படும்.

குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் சுகா­தாரப் பரா­ம­ரிப்­புத் தேவை­க­ளை­யும் சேவை­களை நாடும்­போது அவர்­க­ளுக்கு ஏற்­படும் அனு­ப­வங்­கள் குறித்­தும் அறிந்­து­கொள்­ள இந்த ஆய்வு நடத்தப்படுகிறது. இதன்­மூ­லம் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு வழங்­கும் சேவை­களை மேம்­ப­டுத்தி அவர்­

க­ளுக்கு உயர்­த­ரப் பரா­ம­ரிப்­புச் சேவை வழங்க ஈசூன் ஹெல்த் முனைப்புடன் உள்ளது.

ஈசூன் ஹெல்த் கட்­ட­மைப்­பில் அட்­மி­ரல்ட்டி மருத்­துவ நிலை­யம், கூ டெக் புவாட் மருத்­து­வ­மனை, ஈசூன் சமூக மருத்­து­வ­மனை ஆகி­யவை அடங்­கும்.

ஆய்­வில் பங்­கெ­டுக்­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டா­த­வர்­களும் தங்­கள் ஆரோக்­கி­யநிலை குறித்த

தக­வ­லைப் பகிர்ந்­து­கொள்ள விரும்­பி­னால் அதற்­கா­கவே ஏற்­பாடு செய்­யப்­படும் குவி­நோக்­குக் குழு கலந்­து­ரை­யா­டல்­களில் பங்­கெ­டுக்­க­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

"ஏற்­கெ­னவே நடப்­பில் உள்ள சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அணு­கு­மு­றை­யை­யும் நிர்­வா­கத் தர­வு­க­ளை­யும் ஆய்­வின் முக்­கிய கண்­டு­பி­டிப்­பு­கள் மேம்­ப­டுத்­தும்.

"மக்­கள்­தொ­கை­யின் தற்­

போ­தைய, எதிர்­கால சுகா­தார மற்­றும் சமூ­கத் தேவை­க­ளைப் பூர்த்தி செய்ய அதற்­கான திட்­ட­மி­டு­த­லுக்கு இந்த ஆய்வு உத­வும்," என்று ஈசூன் ஹெல்த்­தின் தலைமை நிர்­வாகி சுவா ஹோங் சூன் கூறி­னார்.

'ஹெல்­த்தி­யர் எஸ்ஜி' உத்­தி­முறை என்று அழைக்­கப்­படும் தேசிய நோய் வரும்முன் காக்கும் திட்­டம் பற்றி சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் இவ்­வாண்டு தொடக்­கத்­தில் அறி­வித்­தார். அதை­ய­டுத்து, இந்த ஆய்வு நடத்­தப்­ப­டு­கிறது.

நோயா­ளி­களை மைய­மா­கக் கொண்ட நோய் வரும்முன் காக்கும் பரா­ம­ரிப்­புக்­குக் கூடு­தல் முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­படும்.

இதன்­மூ­லம் நாள்­பட்ட நோய்­களும் சுகா­தா­ரப் பிரச்­சி­னை­களும் முற்­றுவதற்கு முன்பு கண்­ட­றி­யப்­படும். இந்தப் புதிய அணு­கு­மு­றை­யின் ஒரு பகு­தி­யாகப் புதிய நட­வ­டிக்­கை­க­ளைச் சுகா­தார அமைச்சு நடை­மு­றைப்­ப­டுத்­தும். உதா­ர­ணத்­துக்கு, குடும்ப மருத்­து­வ­ர் ஒருவருடன் குடும்ப உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் பதிவு செய்­து­கொள்ள ஊக்­கு­விக்­கப்­ப­டு­வர்.

தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட குடி­யி­ருப்­பா­ளர்­களை ஆய்வு நடத்­து­வோர் அணு­கும்­போது அதில் பங்­கேற்­கு­மாறு ஈசூன் ஹெல்த்­தின் தலைமை ஆய்­வா­ளர் இணைப் பேரா­சி­ரி­யர் இங் யுக் ஃபான் கேட்டுக்கொண்டார்.

"குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­படும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புச் சேவை­களில் ஏதே­னும் குறை­

பா­டு­கள் இருந்­தால் அதை அடை­யா­ளம் காண ஆய்வு மூலம்

சேக­ரிக்­கப்­படும் தக­வல்­கள் உத­வும். இதன்­மூ­லம் பரா­ம­ரிப்­புச் சேவை­யின் தரத்தை மதிப்­பீடு செய்து அதை மேம்­ப­டுத்த இந்த அணு­கு­முறை வழி­வ­குக்­கும்.

"அத்­து­டன், மக்­கள்­தொ­கை­யின் ஆரோக்­கியநிலையை உயர்த்த, இருப்­பில் உள்ள வளங்­களை நன்கு பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வும் இத்­

திட்­டம் உத­வும்," என்று இணைப்­பே­ரா­சி­ரி­யர் இங் கூறி­னார்.

இந்த ஆய்வு குறித்த மேல் விவ­ரங்­க­ளுக்கு 6602 2862 எனும் தொலை­பேசி எண்ணை அழைக்­க­லாம். அல்­லது yishunhealth.hsse@ktph.com.sg எனும் மின்­னஞ்­சல் முக­வரி மூலம் மின்­னஞ்­சல் அனுப்­ப­லாம்.