என்டியுசியின் புதிய துணைத் தலைமைச் செயலாளர்

என்டியுசியின் புதிய துணைத் தலைமைச் செயலாளர்

1 mins read
ee87bc76-bf7c-4e19-bbc9-4e90a041f35a
டெஸ்மண்ட் டானுடன் (வலது) என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் (இடது). தலைவர் மேரி லியூ.படம்: என்டியுசி -

தேசிய தொழிற்­சங்க காங்­கி­ர­

சின் (என்­டி­யுசி) துணைத்

தலை­மைச் செய­லா­ள­ராக பிர­த­மர் அலு­வ­லகத் துணை அமைச்­சர் டெஸ்­மண்ட் டான் நிய­மிக்­கப்­

பட்­டுள்­ளார்.

இதற்கு முன்பு அப்­ப­த­வியை போக்­குவரத்து, நிதி மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் வகித்­தார். தற்­போது திரு சீ முழு­நேர அர­சாங்­கச்

சேவைக்­குத் திரும்­பி­யுள்­ளார்.

தொழி­லா­ளர் இயக்­கத்­தில் இணைந்­துள்ள திரு டான், உள்­துறை மற்­றும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற துணை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து

வில­கி­யுள்ளார்.

என்­டி­யு­சி­யின் பயிற்சி, உரு­மாற்­றக் குழு­மத்­தின் இயக்­கு­ந­ராக திரு டான் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இக்­கு­ழு­வில் தொழில்­து­றைப் பயிற்சி மற்­றும் உரு­மாற்­றப் பிரிவு, வேலை நிய­மனம் மற்­றும் வேலை வாய்ப்­புப் பயிற்­சிக் கழ­கம்,

என்­டி­யுசி கற்றல் மையம், ஓங் டெங் சியோங் தொழி­லா­ளர் தலை­மைப் பயிற்சிக் கழகம் ஆகி­யவை இடம்­பெ­று­கின்­றன.

சிங்­கப்­பூர் தொழில்­, சேவைத்துறை ஊழி­யர்­கள் சங்­கத்­தின் ஆலோ­ச­க­ரா­க­வும் திரு டான் கடந்த மாதம் 28ஆம் தேதி நிய­மிக்­கப்­பட்­ட­தாக என்­டி­யுசி கூறி­யது. சங்­கத்­தின் நிர்­வா­கச் செய­லா­ள­ரா­க­வும் அவர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.