செய்திக்கொத்து

கொவிட்-19 காரணமாக ஒருவர் மரணம்; 9,392 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் நண்பகல் நிலவரப்படி மேலும் 9,392 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 8,789 பேருக்குச் சமூக அளவில் கிருமி பரவியது. வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த 603 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.

ஏறத்தாழ கடந்த மூன்று மாதங்கள் இல்லாத அளவில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று 11,504 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் கொவிட்-19 காரணமாக ஒருவர் மாண்டார். மொத்தம் 455 கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. ஏழு பேருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யுஓபி வங்கியின் வீட்டுக் கடன் வட்டி விதிகம் புதிய உச்சம்

சிங்கப்பூரின் வீட்டுக் கடன் வட்டி விகிதம் மூன்று விழுக்காட்டைக் கடந்துவிட்டது. யுஓபியின் மூன்று ஆண்டு நிலையான வட்டி விகிதத் திட்டத்தின்கீழ் புதிய வீட்டுக் கடன் வட்டி விகிதம் 3.08 விழுக்காடு என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிவிக்கப்பட்ட 2.88 விழுக்காடு ஆக அதிகமானதாக இருந்தது.

தனது இரண்டு ஆண்டு நிலையான வட்டி விகிதத்தை யுஓபி 2.65 விழுக்காட்டிலிருந்து 2.98 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

தெங்கா குடியிருப்பாளர்களுக்கு கார் பகிர்வுச் சேவை

தெங்கா வட்டாரக் குடியிருப்பாளர்களுக்காக கார் பகிர்வுச் சேவை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து தொடங்க இருக்கிறது. இத்திட்டத்தின்கீழ் டொயோட்டாவின் மின்சார கார்களை அவர்கள் வாடகைக்கு ஓட்டலாம். இந்தக் கார்களை எஸ்பி கைபேசிச் செயலி அல்லது டொயோட்டா கார்களின் பிரதான விநியோகிப்பாளரான போர்னியோ மோட்டோர்ஸின் கின்டோ ஷேர் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம். குறைந்தபட்ச அன்றாட வாடகை $198.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!