சீன அதிகாரிபோல நடித்து மோசடி; 277 பேர் $30 மில்லியனுக்கு மேல் இழந்தனர்

சீன அதிகாரிபோல நடித்து மோசடி; 277 பேர் $30 மில்லியனுக்கு மேல் இழந்தனர்

2 mins read
1724aab8-1f9c-474c-827a-6857fc8ffe6e
-

சீன அதி­கா­ரி­போல பேசி ஏமாற்­றும் மோசடி சம்­ப­வங்­களில் இவ்­வாண்­டில் இது­வரை சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த குறைந்­தது 277 பேர் 30.3 மில்­லி­யன் வெள்­ளியை இழந்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூர் காவல்­துறை நேற்று இந்­தத் தக­வலை தெரி­வித்­தது.

சுகா­தார அமைச்சு, உயர் நீதி­மன்­றம் அல்­லது இதர அர­சாங்க அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்து அைழப்­ப­தா­கக் கூறி குரல் பதிவு செய்­யப்­பட்ட அழைப்­பு­கள் வரும்.

அந்த அழைப்பை பின்­பற்­றும் நபர்­கள் சீன காவல்­துறை அதி­காரி போல நடிக்­கும் மோச­டிக்­கா­ரர்­க­ளி­டம் அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

அப்­போது பண மோசடி, பிற குற்­றங்­க­ளுக்­காக விசா­ரிக்­கப்­ப­டு­வ­தாக மோச­டிக்­கா­ரர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

விசா­ர­ணைக்­குத் தேவைப்­ப­டு­வ­தா­கக் கூறி, பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் சொந்த விவ­ரங்­க­ளை­யும் வங்­கிக் கணக்­குத் தக­வல்­க­ளை­யும் மோச­டிக்­கா­ரர்­கள் பெற்­று­வி­டு­கின்­ற­னர்.

சில சம்­ப­வங்­களில் விசா­ர­ணைக்கு என்று கூறி வங்­கிக் கணக்கை திறக்க வைத்து அதன் வழி­யாக மற்­ற­வர்­க­ளுக்­குப் பணத்­தை­யும் மோச­டிக்­கா­ரர்­கள் மாற்­று­கின்­ற­னர்.

அது மட்­டு­மல்­லா­மல் முன்­பின் அறி­யாத நபர்­க­ளி­டம் ஆவ­ணங்­களை மோச­டிக்­கா­ரர்­கள் ஒப்­ப­டைக்­கச் சொல்­கின்­ற­னர்.

"உங்­கள் மீதான விசா­ர­ணையை ரக­சி­ய­மாக வைத்­தி­ருக்க வேண்­டும்," என்­றும் மோச­டிக்­கா­ரர்­கள் உத்­த­ர­வி­டு­கின்­ற­னர்.

கடந்த மே 26ஆம் தேதி­யன்று சிங்­கப்­பூ­ரின் குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யத்­தின் அதி­கா­ரி­போல மோச­டிக்­கா­ரர்­கள் செயல்­பட்­டது குறித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

மோச­டிக்­கா­ரர்­கள், 16 வயது மாண­வரை அழைத்து மோச­டிக் கும்­ப­லு­டன் தொடர்பு இருப்­ப­தா­கக் கூறி தங்­க­ளு­டைய வங்­கிக் கணக்­கில் 53,100 வெள்­ளியை செலுத்த உத்­த­ர­விட்­ட­னர்.

அந்­தப் பணத்தை திரட்ட முடி­யாத மாண­வர், பயத்­தில் தான் கடத்­தப்­பட்­ட­தாக நாட­க­மாட மோச­டிக்­கா­ரர்­க­ளி­டம் ஒப்­புக்­கொண்­டார்.

இத்­த­கைய மோச­டி­களில் சிக்­கு­ப­வர்­கள் தங்­க­ளு­டைய வங்­கிக் கணக்­கி­லி­ருந்து பரி­வர்த்­த­னை­கள் நடந்­தி­ருப்­பது தெரிய வந்­தாலோ அல்­லது காவல்­துறை விசா­ர­ணைக்­காக பெற்ற பணத்தை மோச­டிக்­கா­ரர்­கள் திருப்­பித் தர மறுத்­தாலோ தாங்­கள் ஏமாற்­றப்­பட்­டதை உணர்­கின்­ற­னர் என்று காவல்­துறை தெரி­வித்­தது.

இந்த நிலை­யில் வெளி­நாட்டு சட்ட அம­லாக்க நிறு­வ­னங்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவோ, யாரை­யும் கைது செய்­யவோ அல்­லது சிங்­கப்­பூ­ரில் உள்ள பொது­மக்­களை விசா­ர­ணைக்கு உத­வு­மாறு கேட்­கவோ அதி­கா­ர­மில்லை என்று காவல்­துறை நினை­வூட்­டி­யது.

கடந்த 2021ஆம் ஆண்­டில் நடந்த ஒரே சம்­ப­வத்­தில் ஆகப்­பெ­ரிய தொகை­யாக $6.2 மில்­லி­யன் மோசடி செய்­யப்­பட்­டது.

மோசடி பற்­றிய கூடு­தல் தக­வல் scamalert.sg என்ற இணை­யப் பக்­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளன.

1800-722-6688 நேர­டித் தொைலபேசி எண்­ணு­டன் தொடர்பு கொண்டு பொது­மக்­கள் மேல் விவ­ரங்­களை அறி­ய­லாம் என்று காவல்­துறை நேற்று தனது அறிக்­கை­யில் தெரி­வித்­தது.