செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e62cd0cf-9023-4a08-8d1a-dc0093fe62be
-

$4,000 லஞ்சம்; நான்கு

வாரச் சிறைத் தண்டனை

நில ஆய்வாளரான பரமானந்தம் சீனிவாசனுக்கு சரக்கு ஏற்றப்பட்ட கப்பலை சோதனையிடும்போது லஞ்சம் பெற்றதற்காக நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களில் மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சரக்குகளை அவர் சோதனையிட்டார். அப்போது தனது வேலையில் குறுக்கிட வேண்டாம் என்று கூறி முஸாஃபர் அலி கான் முஹமட் அக்ரம் என்பவர் கொடுத்த 3,000 அமெரிக்க டாலரை பரமானந்தம் பெற்றுக் கொண்டார்.

இந்தியாவைச் சேர்ந்த 39 வயது பரமானந்தத்துக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனையுடன் லஞ்சம் பெற்ற தொகைக்கு ஈடாக $4,046.70 அபராதமும் விதிக்கப்பட்டது. ஷெல் நிறுவன ஊழியர்களான முஸாஃபர், ஜுனான்டி புங்கட், ரிச்சர்ட் கோ சீ கியோங் ஆகியோரிடம் லஞ்சம் பெற்றதாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட 14 நில ஆய்வாளர்களில் இவரும் ஒருவர்.

சிங்கப்பூரில் ஷெல் உள்ளிட்ட நிறுவனங்கள் கப்பல்களுக்கு விநியோகிக்கும் சரக்குகளை சோதனையிடும் எஸ்ஜிஎஸ் டெஸ்டிங் அண்ட் கண்ட்ேரால் சர்வீசஸ் நிறுவனத்தில் பணியாற்றியபோது பரமானந்தம் லஞ்சம் பெற்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் தம்பதிகளுக்கு

சுகாதார அமைச்சு உதவி

'ஐவிஎஃப்' எனும் செயற்கைக் கருத்தரிப்பு நடைமுறையில் கருவில் உள்ள மரபணுக் கோளாறுகளைக் கண்டறிய உதவும் சோதனைக்கு அரசாங்கம் 75 விழுக்காடு வரை நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது. தீவிரமான பரம்பரை நோய்கள் குழந்தைக்கு ஏற்படலாம் என்று கவலைப்படும் தம்பதிகளுக்கு நிதியுதவி இன்று முதல் வழங்கப் படுகிறது. இருவிதமான மரபணுச் சோதனைக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக நேற்று அறிக்கை வாயிலாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.