புக்கிட் தீமா ரயில் தாழ்வாரத்தில் அமையவிருக்கும் புதிய அம்சங்கள்

புக்கிட் தீமா ரயில் தாழ்வாரத்தில் அமையவிருக்கும் புதிய அம்சங்கள்

1 mins read
523c46dc-089a-4c6f-b269-12f1ffa749f2
-

புக்­கிட் தீமா ரயில் தாழ்­வா­ரத்­தின் மறு­சீ­ர­மைப்­புத் திட்­டத்­தின் அங்­க­மாக புதி­தாக உரு­வாக்­கப்­படும் அம்­சங்­கள் குறித்து நேற்று தக­வல் வெளி­யா­னது.

ஹில்­வி­யூ­விற்­கும் கிராஞ்­சிக்­கும் இடை­யி­லான 6.3 கிலோ­மீட்­டர் தொலை­விற்கு இயற்­கைச் சூழ­லில் நடக்­கும் வண்­ணம் அமைக்­கப்­பட்ட நடை­பாதை இந்த ஆண்டு இறு­திக்­குள் திறந்­து­வி­டப்­படும். அடுத்த ஆண்­டுக்­குள் இதில் புதிய தற்­கா­லிக ஓய்­வி­டங்­களும் கழிப்­ப­றை­களும் கட்­டப்­ப­டு­ம்.

'அப்­பர் புக்­கிட் தீமா டிரஸ்' பாலத்­திற்கு அருகே அமைந்­தி­ருக்­கும் இந்­தத் தள­மே­டைக்கு அருகே இந்த ஆண்டு இறு­திக்­குள் பொதுக் கழிப்­ப­றை­கள் கட்­டப்­படும்.

பாத­சா­ரி­க­ளுக்­கான மேம்­பா­லம் ஒன்று ஹில்­வியூ ரோட்­டிற்கு மேல் கட்­டப்­படும்.

அடுத்த ஆண்டு இந்­தப் பாலம் பொது­மக்­கள் பயன்­பாட்­டுக்­குத் திறந்­து­வி­டப்­படும்.

ஹில்­வியூ ரோட்­டுக்­கும் செஸ்ட்­நட் டிரை­வுக்­கும் இடைப்­பட்ட ரயில் தாழ்­வா­ரத்­தின் எஞ்­சிய பகுதி 2024ஆம் ஆண்டு இறு­திக்­குள் சீர­மைக்­கப்­படும்.

புதி­தாக உரு­வாக்­கப்­படும் 'ரைஃபிள் ரேஞ்ச்' இயற்­கைப் பூங்­கா­விற்கு இட்­டுச்­செல்­லும் புதிய பாதை இந்த ஆண்டு இறு­திக்­குள் தயா­ரா­கி­வி­டும். 2024ல் பழைய ஜூரோங் ரயில்­பா­தையை ஒட்டி அமைக்­கப்­ப­ட­வி­ருக்­கும் புதிய இயற்கை நடை­பா­தை­யு­டன் ரயில் தாழ்­வா­ரத்தை இணைக்­கும் பாதை­யும் அமைக்­கப்­படும்.

போன விஸ்தா முனை, குவீன்ஸ்வே முனை, தஞ்­சோங் பகார் ரயில் நிலை­யம் உள்­ளிட்ட முனை­களும் உரிய சமூ­கப் பயன்­பாட்டு அம்­சங்­க­ளு­டன் ரயில் தாழ்­வார மறு­மேம்­பாட்­டுப் பணி­க­ளுக்­குப் பிறகு பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­வி­டப்­படும்.