950,000 குடும்பங்களுக்கு இரண்டாம் தவணை ‘ஜிஎஸ்டி’ பற்றுச்சீட்டுகள்

வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­களில் வசிக்­கும் 950,000 சிங்­கப்­பூர்க் குடும்­பங்­கள் இரண்­டாம் தவணை பொருள், சேவை வரிப் பற்­றுச்­சீட்­டு­க­ளை­யும் சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணத் தள்­ளு­ப­டி­யை­யும் இந்த மாதம் பெற்­றுக்­கொள்­ள­ இருக்­கின்­றன.

இந்த மாதம் 110 வெள்ளி முதல் 190 வெள்ளி வரை­யி­லான மதிப்­புள்ள 'யூ சேவ்' பற்­றுச்­சீட்­டு­க­ளு­டன் அரை மாதம் முதல் ஒரு மாதம் வரை­யி­லான சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணத் தள்­ளு­ப­டி­யும் வழங்­கப்­படும்.

மூன்று அறை, நான்கு அறை வீடு­களில் வசிப்­போ­ருக்கு இம்­முறை அரை மாதக் கட்­ட­ணத் தள்­ளு­படி மட்­டுமே வழங்­கப்­படும். ஏப்­ர­லில் ஒரு மாதக் கட்­ட­ணத் தள்­ளு­படி அளிக்­கப்­பட்­டது.

தகு­தி­பெ­றும் குடும்­பங்­கள் ஆண்­டுக்கு ஒன்­றரை மாதம் முதல் மூன்­றரை மாதம் வரை­யி­லான கட்­ட­ணத் தள்­ளு­ப­டி­யைப் பெற்­றுக்­கொள்­ளுமென்று நிதியமைச்சு கூறியது.

இந்த நிதி­யாண்­டில் 'யூ சேவ்' பற்­றுச்­சீட்­டு­க­ளின் மதிப்பு இரட்­டிப்­பா­கி­யி­ருப்­ப­தால் ஓரறை, ஈரறை வீட்­டில் இருப்­போர் கிட்­டத்­தட்ட 10 மாத பய­னீட்­டுக் கட்­ட­ணத்­துக்கு ஈடான தொகை­யைப் பெற்­றுக்­கொள்­வர். மூன்று அறை, நான்கு அறை வீடு­களில் வசிப்­போ­ருக்கு இது ஏறத்­தாழ ஆறு மாதக் கட்­ட­ணத்­துக்கு ஈடாக இருக்­கும்.

வீட்டின் பரப்பளவைப் பொறுத்து ஒவ்வொரு குடும்பமும் மொத்தம் 440 வெள்ளி முதல் 760 வெள்ளி வரை பெற்றுக்கொள்ளும். இந்த நிதியாண்டில் மொத்தம் 720 மில்லியன் வெள்ளி வழங்கப்படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!