ஒசிபிசி வங்கியின் வாடிக்கையாளர்களைக் குறிவைத்த மோசடியில் தனது பங்கை ஒப்புக்கொண்ட ஒருவர் சீர்திருத்தப் பயிற்சியை மேற்கொள்ளுமாறு செவ்வாய்க்கிழமையன்று (5 ஜூலை) உத்தரவிடப்பட்டுள்ளது.
மோசடியில் குற்றத்தை ஒப்புக்கொண்ட முதல் நபரான 21 வயது லியோங் ஜுன் சியேன் குறைந்தது ஓராண்டுக்கு சீர்திருத்தப் பயிற்சி மேற்கொள்ளவேண்டும்.
அதன்படி அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கடுமையான பயிற்சித் திட்டத்திற்கு உட்படுத்தப்படுவார்.
திட்டத்தில் மனநல ஆலோசனையும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
திட்டமிட்ட குற்றச் செயல் சட்டத்தின்கீழ் தன் மீது சுமத்தப்பட்டிருந்த ஒரு குற்றச்சாட்டை கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதியன்று லியோங் ஒப்புக்கொண்டார்.
அதோடு, குற்றச் செயல், கலவரம் ஆகியவற்றில் ஈடுபட்டு அவற்றின் மூலம் பலனடைந்ததன் தொடர்பில் சுமத்தப்பட்டிருந்த இரு குற்றச்சாட்டுகளையும் அவர் ஒப்புக்கொண்டார்.

