அமைச்சர் ஓங்: அண்மைய கொவிட்-19 கிருமித்தொற்று அலையை முன்னிட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட மாட்டா

சிங்­கப்­பூர் தற்­போது புதிய கொவிட்-19 கிரு­மித்­தொற்று அலையை எதிர்­கொண்­டு ­வ­ரு­கிறது; இருப்­பி­னும் கிரு­மிப்­ப­ர­வல் கட்­டுப்­பாடு நட­வ­டிக்­கை­கள் முதல்­மு­றை­யா­கக் கடு­மை­யாக்­கப்­ப­ட­வில்லை.

சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள் இந்­தச் சுமை­யைத் தாங்­கிக்­கொள்ள தோள்­கொ­டுப்­ப­தாக இதற்­குப் பொருள் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யீ காங் கூறி­யுள்­ளார்.

தாதி­ய­ருக்­கான சிறப்பு விரு­தளிப்பு நிகழ்ச்­சி­யில் பேசிய அவர் தாதி­ய­ரின் முயற்­சி­க­ளுக்கு நன்றி தெரி­வித்­தார்.

உள்­ள­ரங்­கு­களில் முகக்­க­வ­சம் அணி­யும் விதி­முறை மட்­டுமே தற்­போது நடப்­பில் உள்­ள­தைச் சுட்­டிய அமைச்­சர், தடுப்­பூ­சி­கள் இன்­னும் தொடர்ந்து செலுத்­தப்­ப­டு­வ­தா­க­வும் பெரும்­பா­லோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு விட்­ட­தா­க­வும் கூறி­னார்.

தற்­போ­தைய ஓமிக்­ரான் ரக கொவிட்-19 கிரு­மித்­தொற்று அலை­யில் மருத்­து­வ­ம­னை­கள், தாதி­யர், மருத்­துவ ஊழி­யர்­கள் ஆகி­யோர் பெரி­தும் சுமை­யைத் தாங்­கு­வ­தாகக் குறிப்­பிட்­டார்.

சிறப்­பா­கப் பணி­யாற்­றிய 125 தாதி­ய­ருக்கு அமைச்­சர் ஓங் விரு­து­களை வழங்­கி­னார்.

மெச்­சத் தகுந்த சேவை­யாற்­றிய, தொழில்­முறை மேம்­பாட்­டில் பங்­கு­கொண்ட, தாதி­மைத் தொழி­லின் உயர்­வுக்­குப் பங்­க­ளித்த தாதி­யர்­கள் இவ்­வாறு சிறப்­பிக்­கப்­பட்­ட­னர்.

சீரு­டை­யின்­மேல் அணிந்­து­கொள்­ளக்கூடிய பதக்­கத்­து­டன் ஆயி­ரம் வெள்­ளித் தொகை­யும் இவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது.

விருது பெற்ற தாதி­ய­ரில் ஒரு­வ­ரான 37 வயது ஸ்ரீவித்யா ஜெய­கோ­பா­லன் (படம்), மூன்று சிறு பிள்­ளை­க­ளுக்­குத் தாய்.

ஒன்­பது மணி நேரம் அன்­றா­டம் பணி­யாற்­றி­னா­லும், கிரு­மிப்­ப­ர­வல் உச்­சத்­தில் இருந்த கால­கட்­டத்­தில் வெளி­நாட்டு ஊழி­யர் தங்கு­வி­டு­தி­களில் சென்று கிரு­மிப்­ப­ர­வல் பரி­சோ­தனை நடத்­தும் மருத்­து­வக் குழு­வில் இவர் தொண்­டூ­ழி­யம் செய்­தார்.

கூ டெக் புவாட் மருத்­து­வ­ம­னை­யில் நினை­வாற்­றல் குறை­பாடு உள்ள முதி­ய­வர்­க­ளைப் பரா­ம­ரிக்­கும் பணி­யில் உள்ள ஸ்ரீவித்யா, கிரு­மிப்­ப­ர­வலை முன்­னிட்டு வரு­கை­யா­ளர்­கள் மருத்­து­வ­ம­னைக்­குள் அனு­ம­திக்­கப்­ப­டாத நிலை­யில் காணொளி வாயி­லாக நோயா­ளி­களும் குடும்­பத்­தி­ன­ரும் பேசிக்­கொள்ள வகை­செய்­தார்.

நிகழ்ச்­சி­யில் பேசிய திரு ஓங், கிரு­மிப்­ப­ர­வல் உச்­ச­ம­டைந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று கூறி­ய­து­டன் இனி நிலைமை மேம்­படும் என்­றும் நம்­பிக்கை தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!