பிள்ளைகளைத் துன்புறுத்திய தாயாருக்குக் கடும் எச்சரிக்கை

பிள்ளைகளைத் துன்புறுத்திய தாயாருக்குக் கடும் எச்சரிக்கை

1 mins read
bd3f51a6-7eb2-476f-ace8-6e0fe0dde18f
-

பிள்­ளை­களை அடித்­துத் துன்­பு­றுத்­திய தாயா­ருக்­குக் கடு­மை­யான எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

மூன்று பிள்­ளை­க­ளுக்­குத் தாயான அப்­பெண் 2020ஆம் ஆண்­டில் தமது மக­னை­யும் மக­ளை­யும் அடித்­துத் துன்­பு­றுத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அப்­பெண் சிறை­யில் விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்டு பிறகு மன­ந­லக் கழ­கத்­துக்கு அனுப்­பப்­பட்­ட­தாக அரசுத்தரப்பு வழக்­

க­றி­ஞர் கூறி­னார்.

அப்­பெண் அந்­தக் குற்­றங்

­க­ளைப் புரிந்­த­போது அவ­ருக்கு 'ஸ்கிட்­சோ­ஃபி­ரி­னியா' எனப்­படும் மன­நோய் இருந்­தது உறுதி செய்­யப்­பட்ட நிலை­யில் அவ­ருக்­குத் தண்­டனை விதிக்­கப்­ப­ட­வில்லை.

மன­நோய் கார­ண­மாக அவர் தமது பிள்­ளை­களை அடித்­த­தாக அரசுத்தரப்பு வழக்­க­றி­ஞர் கூறி­னார்.

மாறாக, அவ­ருக்கு நீதி­மன்­றம் கடு­மை­யான எச்­ச­ரிக்கை விடுத்­தது. இதே குற்­றங்­க­ளின் பேரில் அவர் மீது மீண்­டும் குற்­றம் சுமத்த முடி­யாது என்று நீதி­மன்­றம் தெரி­வித்­தது.