உட்லண்ட்ஸ் காஸ்வே கடற்பாலத்தில் 11 வாகனங்களை மோதிய லாரியின் ஓட்டுநருக்கு முன்னதாக போக்குவரத்து குற்றங்களின் தொடர்பில் 33 அழைப்பாணைகள் இருந்திருக்கின்றன.
மலேசியாவைச் சேர்ந்த அந்த 34 வயது ஓட்டுநருக்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாத அழைப்பாணைகளும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜோகூர் பாருவின் துணை காவல்துறை ஆணையர் ராவுப் செலாமாட் இதைத் தெரிவித்தார்.
அந்த ஓட்டுநர் மூன்று நாள்களுக்கு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.
லாரியில் ஏற்பட்ட கோளாற்றால் அச்சம்பவம் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

