1.5 மி. சிங்கப்பூரர்களுக்கு $700 வரை ரொக்கம்

விரி­வு­ப­டுத்­தப்­பட்ட பொருள், சேவை வரி பற்­றுச்­சீட்­டு­கள் திட்­டத்­தின்­கீழ் அடுத்த மாதம் சிறப்பு வழங்­கு­தொ­கை­கள் அளிக்­கப்­படும் என்று நிதி­ய­மைச்சு தெரி­வித்­துள்ளது.

ஏறக்­கு­றைய ஒன்­றரை மில்­லி­யன் சிங்­கப்­பூ­ரர்­கள் இதற்­குத் தகுதி­பெ­று­வர். இதன்­கீழ் ஒவ்­வொ­ரு­வருக்­கும் 700 வெள்ளி வரை­யி­லான தொகை வழங்­கப்­படும்.

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங், சென்ற மாதம் பொருள், சேவை வரி பற்­றுச்­சீட்­டு­கள் திட்­டம் விரி­வு­கா­ணும் என அறி­வித்தார்.

தகு­தி­பெ­றும் சிங்­கப்­பூ­ரர்­கள் இரண்டு தொகை­க­ளைப் பெற்­றுக்­கொள்­வர். முத­லா­வது ஜிஎஸ்­டிவி ரொக்­கம், அடுத்­தது ஜிஎஸ்­டிவி சிறப்பு ரொக்க வழங்­கு­தொகை.

இந்­தத் திட்­டத்­தின்­கீழ், 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய சிங்­கப்­பூ­ரர்­க­ளின் மத்­திய சேம­நிதி மெடி­சேவ் கணக்­கில் 450 வெள்ளி வரை நிரப்­பப்­படும். ஏறத்­தாழ 575,000 பேர் இத­னால் பல­ன­டைவர்.

டிசம்­பர் 31, 1969க்கு முன்­னர் பிறந்த, இது­வரை முன்­னோ­டித் தலை­முறை அல்­லது மெர்­டேக்கா தலை­மு­றை­யி­ன­ருக்­கான சலு­கை­களைப் பெற்­றுக்­கொள்­ளாத சிங்­கப்­பூ­ரர்­க­ளின் மெடி­சேவ் கணக்­கில் 100 வெள்ளி செலுத்­தப்­படும். அடுத்த மாத இறு­திக்­குள் இந்­தத் தொகை நிரப்­பப்­படும்.

குறைந்த வரு­மா­னப் பின்­ன­ணி­யில் இருந்து வரு­வோ­ருக்­கும் முதி­ய­வர்­க­ளுக்­கும் பொருள், சேவை வரிச் செலவு, அதி­க­ரிக்­கும் வாழ்க்­கைச் செல­வி­னம் ஆகி­ய­வற்­றைச் சமா­ளிக்க உத­வும் அர­சாங்க நட­வ­டிக்­கை­யின் ஓர் அங்­கம் இது என்று நிதி­ய­மைச்சு கூறியது.

ஏற்­கெ­னவே இந்த ஆண்­டுத் தொடக்­கத்­தில் இருந்து 'சிடிசி' பற்­றுச்­சீட்­டு­கள், 'ஜிஎஸ்டி யூ சேவ்' பற்­றுச்­சீட்­டு­கள், சேவை, பரா­ம­ரிப்­புக் கட்­ட­ணத் தள்­ளு­படி, மாண­வர்­க­ளின் 'எடு­சேவ்' கணக்கு அல்­லது உயர்­கல்­விக்­கான கணக்­கில் தொகை நிரப்­பப்­பட்­ட­தை­யும் அமைச்சு சுட்­டி­யது.

வரவிருக்கும் மாதங்களில் மேலும் சில வழங்குதொகைகள், பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடி, குழந்தை மேம்பாட்டுக் கணக்கில் நிரப்புதொகை போன்றவை வழங்கப்படும் என்பதையும் நிதியமைச்சு குறிப்பிட்டது.

பண­வீக்­கம் மக்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­தும் தாக்­கத்தை அர­சாங்­கம் புரிந்­து­கொண்­டி­ருப்­பதை இது காட்­டு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பேசிய பல்­வேறு தரப்­பி­னர் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

உணவுப்பொருள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, வாடகை உயர்வு எனச் செலவுகள் அதிகரித்திருப்பதால் இத்தகைய உதவியை அவர்கள் வரவேற்றனர்.

விரிவுகாணும் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தின்கீழ் ஆகஸ்ட்டில் சிறப்பு வழங்குதொகை

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!