இந்தோனீசிய கோழி இறைச்சி இறக்குமதி இன்று தொடக்கம்

இந்தோனீசிய கோழி இறைச்சி இறக்குமதி இன்று தொடக்கம்

1 mins read
538984fd-023a-4ba3-9808-0ea29263421c
-

இந்­தோ­னீ­சியா இன்று முதல் சிங்­கப்­பூ­ருக்கு கோழி இறைச்­சியை ஏற்­று­மதி செய்­ய­வி­ருப்­ப­தாக அந்­நாட்டு வேளாண் அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

முதற்கட்டமாக, உறை­ய­வைக்கப்­பட்ட கோழி இறைச்சி அனுப்­பப்­படும் என்று அது கூறியது.

சிங்­கப்­பூ­ருக்கு கோழி இறைச்சி, கோழி இறைச்­சிப் பொருள்­கள் ஆகியவற்றை அனுப்­பு­வ­தற்கு இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்த மூன்று நிறு­வ­னங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தாக சிங்­கப்­பூர் உணவு அமைப்பு தெரி­வித்­தது.

மேலும் 12 இந்­தோ­னீ­சிய நிறு­வ­னங்­கள் இதற்கு விண்­ணப்­பித்­துள்­ள­தா­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன.

சிங்­கப்­பூர் சென்ற ஆண்டு 214,400 டன் கோழி இறைச்­சியை இறக்­கு­மதி செய்­தது. அதில் ஏறக்­கு­றைய மூன்­றில் ஒரு பங்கு மலே­சி­யா­வில் இருந்து தரு­விக்­கப்­பட்டது.

மலே­சியா சென்ற மாதம் கோழி இறைச்சி ஏற்­று­ம­திக்­குத் தடை விதித்­த­தை­ய­டுத்து இந்­தோ­னீ­சியா, தாய்­லாந்து ஆகி­ய­வற்­றி­லி­ருந்து கோழி இறைச்சி இறக்­கு­மதி செய்­யப்­படும் என்று சிங்­கப்­பூர் அறி­வித்­தது.