அவசரமாகத் திருப்பிவிடப்பட்ட 'ஸ்கூட்' விமானம்

அவசரமாகத் திருப்பிவிடப்பட்ட 'ஸ்கூட்' விமானம்

1 mins read
61b8bf02-4147-41db-8bdd-c1ae1129c7ee
-

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பெர்த் நக­ரி­லி­ருந்து சிங்­கப்­பூர் கிளம்­பிய 'ஸ்கூட்' விமா­னத்­தில் தொழில்­நுட்­பக் கோளாறு ஏற்­பட்­ட­தால் மீண்­டும் பெர்த் விமான நிலை­யத்­திற்கே அது திருப்­பி­வி­டப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் இரவு 7.40 மணி­ய­ள­வில் கோளாறு கண்­ட­றி­யப்­பட்­டது. 'டிஆர்009' விமா­னம் கிளம்பி 20 நிமி­டங்­களே ஆன நிலை­யில் மீண்­டும் பெர்த் செல்ல முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தாக 'ஸ்கூட்' நிறு­வ­னம் சொல்­லிற்று.

தேவை­யான உதிரி பாகங்­கள் பெர்த்­தில் கிடைக்­கா­த­தால் அதை உட­ன­டி­யா­கப் பழு­து­பார்க்க இய­ல­வில்லை. பய­ணி­கள் நேற்று மாலை ஆறு மணிக்­குப் புறப்­படும் 'டிஆர்009' விமா­னத்­தில் இட­மி­ருந்­தால் செல்­ல­லாம்; அல்­லது மாற்று விமா­னம் வரும்­வரை காத்­தி­ருந்து இரவு ஒன்­பது மணிக்கு அதில் செல்­ல­லாம் என்று தெரி­வு­கள் வழங்­கப்­பட்­டன.

உள்­ளூர்ப் பய­ணி­கள் அவ­ர­வர் இல்­லங்­க­ளுக்­குத் திரும்­பும்­படி கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர். மற்­ற­வர்­கள் ஹோட்­ட­லில் தங்க விமான நிறு­வ­னம் ஏற்­பாடு செய்­தது. சிங்­கப்­பூ­ரில் வேறு விமா­னத்­துக்கு மாற­வேண்­டிய பய­ணி­களுக்­கு அதன் தொடர்­பில் பய­ணச்­சீட்டு முன்­ப­தி­வு­களை மாற்­றித்­தர 'ஸ்கூட்' நிறு­வ­னம் உதவி­வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.