பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுக்கு $23.5 மி. ஒதுக்கீடு

பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வுக்கு $23.5 மி. ஒதுக்கீடு

1 mins read
42c2918f-201c-4195-8c45-8f815045d4a6
-

பரு­வ­நிலை மாற்­றம், நீண்­ட­கால அடிப்­ப­டை­யில் சிங்­கப்­பூ­ரில் ஏற்­படுத்­தக்­கூ­டிய தாக்­கத்­தைக் கண்­ட­றி­யும் புதிய ஆய்­வுத் திட்­டம் நேற்று தொடங்­கி­யுள்­ளது. இதற்­காக 23.5 மில்­லி­யன் வெள்ளி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­க­ரிக்­கும் கடல்­ மட்­டம், உணவு பாது­காப்­பின்மை உள்ளிட்ட பல்­வேறு அம்­சங்­களை ஆய்­வு­செய்து அவற்­றைச் சமா­ளிப்­ப­தற்­கான கொள்­கை­களை வழி­ந­டத்த இது உத­வும்.

பருவநிலை மாற்ற அறிவியல் ஆய்வுத் திட்டத்தை தேசிய சுற்றுப்புற வாரியத்தின் சிங்கப்பூர் பருவநிலை ஆய்வு நிலையம் மேற்கொள்ளும். இந்த ஆய்வு ஐந்து முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்தும்.

கடல் மட்ட உயர்வு, நீர்வள­மும் வெள்ள நிர்­வா­க­மும், பல்­லு­யிர்க் கட்­ட­மைப்­பும் உண­வுப் பாது­காப்பும், சுகா­தா­ர­மும் எரி­சக்­தி­யும், அறி­வி­ய­லுக்­கும் கொள்­கை­க­ளுக்­கும் இடை­யி­லான இணைப்­புப் பால­மாக ஆய்வு மேற்­கொள்­ளு­தல் ஆகி­யவை இந்த முன்­னு­ரி­மை­கள்.

ஆய்­வின் தொடக்க நிகழ்ச்­சி­யில், நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ (படம்) உரை­யாற்­றி­னார்.

2100ஆம் ஆண்­டுக்­குள் உல­கின் 30 விழுக்­காட்டு விளை­நி­லங்­களும் கால்­ந­டை­க­ளுக்­கான மேய்ச்­சல் நிலப்­ப­ரப்­பும் பரு­வ­நிலை ரீதி­யாக சீர்­கெ­டும் என்று ஐக்­கிய நாட்டு நிறு­வ­னம் அண்­மை­யில் கூறி­யி­ருப்­பதை அமைச்­சர் சுட்­டி­னார்.

மீன்­பி­டிப்பு, வேளாண்மை போன்ற பொருளியல் நட­வ­டிக்­கை­கள் இந்த வட்­டா­ரக் கட­லோ­ரப் பகு­தி­களில் இடம்­பெ­று­வ­தைச் சுட்­டிய அவர், ஆய்­வுத்­த­ர­வு­கள் பரு­வ­நிலை மாற்­றத்­தைக் குறைப்­ப­தற்­கான சோதனை முயற்­சி­களை மேற்­கொள்­ளும் வட்­டார நாடு­க­ளு­டன் பகிர்ந்­து­கொள்­ளப்­படும் என்­று தெரிவித்தார்.