புருணை ஆயுதப்படையின் முன்னாள் தலைவருக்கு சிங்கப்பூரின் ஆக உயரிய ராணுவ விருது

புருணை ஆயுதப்படையின் முன்னாள் தலைவருக்கு சிங்கப்பூரின் ஆக உயரிய ராணுவ விருது

2 mins read
da6ee126-5e03-4a9e-9d55-f75ced771716
புருணை ஆயுதப்படையின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் பலாவான் ஹாஜி ஹம்சா ஹாஜி சகாட், சிங்கப்பூரின் ஆக உயரிய ராணுவ விருதைப் அதிபர் ஹலிமா யாக்கோப்பிடமிருந்து பெற்றுக்கொண்டார். படம்: தற்காப்பு அமைச்சு -

அரச புருணை ஆயு­தப்படை­யின் முன்­னாள் தள­பதி மேஜர் ஜென­ரல் பலா­வான் ஹாஜி ஹம்சா ஹாஜி சகாட்­டுக்கு சிங்­கப்­பூ­ரின் ஆக உய­ரிய ராணுவ விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­டுள்­ளது.

அதி­பர் ஹலிமா யாக்­கோப் இஸ்­தா­னா­வில் நேற்று மேன்­மை­தங்­கிய ராணுவச் சேவை விருதை அவ­ருக்கு வழங்­கி­னார்.

மேஜர் ஜென­ரல் ஹம்­சா­வின் தலை­மை­யின்­கீழ் இரு­த­ரப்பு ராணு­வப் பயிற்­சி­கள் மிகச் சிறப்­பான முறையில் நடை­பெற்­றன.

'எக்­சர்­சைஸ் மஜு பெர்­சாமா', 'எக்­சர்­சைஸ் பெலிக்­கன்', 'எக்­சர்­சைஸ் ஏர்­காட்' போன்­றவை இவற்­றில் குறிப்­பி­டத்­தக்க பயிற்­சி­கள்.

இரு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லான தற்­காப்பு உற­வு­களை இவர் வலுப்­ப­டுத்­தி­யதை அங்­கீ­க­ரிக்­கும் வகை­யில் இந்த விருது வழங்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ருக்­கும் புரு­ணைக்­கும் இடை­யி­லான ராணுவ நிபு­ணத்­து­வப் பரி­மாற்­றம், பயிற்­சி­களில் கலந்து­கொள்ள இரு­த­ரப்பு ராணுவ வீரர்­களும் இரு நாடு­க­ளுக்­கும் பய­ணம் மேற்­கொள்­ளு­தல் ஆகிய நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற மேஜர் ஜென­ரல் ஹம்சா வழி­வ­குத்­தார்.

இரு நாட்டு ராணுவ ஒத்­து­ழைப்­பிற்கு இத்­த­கைய பயிற்சி நட­வடிக்­கை­கள் உத­வி­ய­தாக சிங்­கப்­பூர் தற்­காப்பு அமைச்சு கூறி­யது.

சென்ற ஆண்டு மெய்­நி­கர் முறை­யில் இடம்­பெற்ற 18ஆவது ஆசி­யான் தற்­காப்­புத் தலை­வர்­கள் மாநாட்டை புருணை ஆயு­தப்­படை ஏற்­று­ ந­டத்­தி­யது. இந்­ந­ட­வ­டிக்கை சிறப்­புற மேஜர் ஜென­ரல் ஹம்­சா­வின் சிறப்­பான தலை­மைத்­து­வ­மும் ஒரு கார­ணம்.

இம்­மா­தம் 10ஆம் தேதி சிங்­கப்­பூர் வந்த இவர், நாளை வரை இங்கு இருப்­பார். மேஜர் ஜென­ரல் ஹம்­சா­வின் வருகை, இரு நாடு­களுக்­கும் இடை­யி­லான நீண்­ட­கால, அணுக்­க­மான உற­வு­களை எடுத்­துக்­காட்­டு­வ­தாக சிங்­கப்­பூர் தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ருக்­கும் புரு­ணைக்­கும் இடை­யி­லான தற்­காப்பு உற­வு­கள் தொடங்கி சென்ற ஆண்­டு­டன் 45 ஆண்­டு­கள் நிறை­வு­பெற்­றுள்­ளன.

சிங்­கப்­பூ­ரின் ஆக உய­ரிய ராணுவ விருதை இதற்கு முன்­னர் ஆஸ்­தி­ரே­லியா, மலே­சியா ஆகி­ய­வற்­றின் ராணு­வத் தலை­வர்­கள் பெற்­றுக்­கொண்­டுள்­ள­னர்.