ஆகாய டாக்சிகளில் மரினா பே பகுதியைச் சுற்றிவரலாம்

ஆகாய டாக்சிகளில் மரினா பே பகுதியைச் சுற்றிவரலாம்

2 mins read
a58783b5-c535-4827-9afb-540a93f120e3
வோலோகாப்டர் ஆகாய டாக்சியில் புகைப்படங்களுக்குக் காட்சியளிக்கும் வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் (இடது), வோலோகாப்டர் தலைமை வணிக அதிகாரி கிறிஸ்டியன் பாயர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆணையத்திடமிருந்து ஒப்புதலுக்காக காத்திருக்கும் 'வோலோகாப்டர்'

மரினா பே வட்­டா­ரத்­தைப் புதிய வித­மாக ரசிக்க விரும்­பும் சுற்­றுப்­ப­ய­ணி­க­ளுக்கு நற்­செய்தி. சிங்­கப்­பூ­ரில் வணிக ரீதி­யான முதல் ஆகாய டாக்­சி­க­ளுக்­காக முன்­மொழி­யப்­பட்­டுள்ள பய­ணப் பாதைக்கு அதி­கா­ரி­கள் ஒப்­பு­தல் அளித்­தால் பய­ணி­கள் அவற்­றில் பய­ணம் செய்­ய­லாம்.

ஆகாய டாக்சி துறை­யில் முன்­னோ­டி­யா­கத் திக­ழும் 'வோலோ­காப்­டர்' நிறு­வ­னம் இயக்­கும் இந்த 12 கிலோ­மீட்­டர் பய­ணப் பாதை, 2024 நடுப்­ப­கு­தி­யில் தொடங்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. விமா­னி­கள், பொறி­யா­ளர்­கள், சேவைப் பணி­யா­ளர்­கள் போன்­ற­வர்­க­ளைப் பணி­ய­மர்த்­தும் வேலை அடுத்த ஆண்டு இறு­திக்­குள் தொடங்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக வோலோ­காப்­டர் நிறு­வனத்­தின் தலைமை வணிக அதி­காரி கிறிஸ்­டி­யன் பாயர் தெரி­வித்­தார்.

அங் மோ கியோ­வில் உள்ள தொழில்­நுட்­பக் கல்­விக் கழக மத்­திய கல்­லூ­ரி­யில் நேற்று தொடங்­கப்­பட்ட பொதுக் கண்­காட்­சி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் பேசி­னார்.

முழு­மை­யாக மின்­சா­ரத்­தில் இயங்­கும் ஆற்­றல் உடைய இந்த ஆகாய டாக்சி மணிக்கு 90 கிலோ­மீட்­டர் வேகத்­தி­லும் 35 கிலோ­மீட்டர் தூர­மும் செல்­லும்.

அனைத்­தும் திட்­ட­மிட்­ட­படி நடந்­தால், ஜெர்­மா­னிய நிறு­வ­ன­மான வோலோ­காப்­ட­ரின் முதல் பய­ணம், மரினா சவுத்­தில் தொடங்கி மரினா நீர்த்­தேக்­கத்­தில் முடி­வ­டை­யும். மரினா அணைக்­கட்டு, பெஞ்­சமின் ஷியர்ஸ் பாலம் ஆகிய பகுதி­களில் தரை­யி­லி­ருந்து 100 முதல் 150 மீட்­டர் உய­ரத்­தில் இந்த டாக்சி பறக்­கும். தஞ்­சோங் ரூ பகு­தி­யைச் சுற்­றி­விட்டு மரினா சவுத் பகு­திக்கு இது திரும்­பும்.

இந்­தப் பய­ணம் ஏறக்­கு­றைய 15 நிமி­டங்­கள் நீடிக்­கும். இந்­தப் பய­ணப் பாதை குறித்த ஆய்­வு­கள் நடந்து முடிந்­து­விட்­ட­தா­கத் தெரி­வித்த திரு பாயர், முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள இந்­தப் பாதைக்கு ஒப்­பு­தல் அளிக்­கும் பணி இறு­திக்­கட்­டத்­தில் இருப்­ப­தா­கச் சொன்­னார்.

ஆகாய டாக்சி, சுற்­றுப்­ப­ய­ணி­கள் ஏறிச் செல்­வ­தற்­கான பய­ணப் பாதை என்று குறிப்­பி­டப்­ப­டு­வ­தற்­கான கார­ணத்தை திரு பாயர் விளக்­கி­னார்.

"சிங்­கப்­பூர் சாலை­களில் கடு­மை­யான போக்­கு­வ­ரத்து நெரி­சல் இல்லை. ஆனால், சிங்­கப்­பூ­ருக்கு ஆண்­டு­தோ­றும் வரும் ஏறக்­கு­றைய 20 மில்­லி­யன் சுற்­றுப்­ப­ய­ணி­கள், உற்­சா­க­மான அனு­ப­வத்­தைப் பெற விரும்­பு­கின்­ற­னர். எனவே, ஆகாய டாக்­சி­களில் ஏறி சுற்­றிப் பார்ப்­பது அத்­த­கைய அனு­ப­வத்தை வழங்­கும் என நாங்­கள் நம்­பு­கி­றோம்," என்­றார் அவர்.

ஆகாய டாக்சி புறப்­ப­டு­வ­தற்­கான, தரை­யி­றங்­கு­வ­தற்­கான இடத்­தைத் தேர்வு செய்­வது குறித்து வோலோ­காப்­டர் நிறு­வ­னம் அதி­கா­ரி­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தாக திரு பாயர் கூறி­னார்.

வோலோ­காப்­ட­ரின் ஆகாய டாக்­சி­கள், சிறிய ஹெலி­காப்­டர்­க­ளைப் போன்று தோற்­ற­ம­ளிக்­கும். இவை பாது­காப்­பா­னவை, அதிக இரைச்­சல் எழுப்­பா­தவை, சௌக­ரி­ய­மா­னவை, சுற்­றுச்­சூ­ழ­லுக்கு உகந்­தவை எனக் கூறப்­ப­டு­கிறது.

வோலோ­காப்­டர் அதன் ஆகாய டாக்சி சேவை­யைத் தொடங்க சிங்­கப்­பூ­ரை­யும் பிரான்ஸ் தலை­ந­கர் பாரி­சை­யும் முத­லிரு நகர்­க­ளாக தேர்வு செய்­துள்­ளது.

சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், ஐரோப்­பிய அதி­கா­ரி­களி­டம் இருந்து தேவை­யான ஒப்­பு­தல்­க­ளைப் பெறும் பணி­யில் வோலோ­காப்­டர் ஈடு­பட்டு உள்­ளது.