2 ஹெக்டர் கானகத்தை தக்கவைக்கும் வீவக

2 ஹெக்டர் கானகத்தை தக்கவைக்கும் வீவக

1 mins read
5cbc77cb-9f86-4e0d-b886-9929d4b48b27
-

சுவா சூ காங்கில் புதிய வீடமைப்புப் பேட்டையை அமைப்பதற்கான திட்டங்கள், குறைந்தது 2 ஹெக்டர் பரப்பளவிலான பசுமைப் பகுதியை உள்ளடக்க மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் ஆய்வை மேற்கொண்டதற்கும் பொதுமக்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்றதற்கும் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே உள்ள பாங் சுவா கால்வாயில் பசுமைப் பகுதி தக்கவைத்துக் கொள்ளப்படும் என்று கடந்த புதன்கிழமை (ஜூலை 6) வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) வெளியிட்ட எழுத்துபூர்வ அறிக்கையில் தெரிவித்தது.

ஆரோக்கியமான, முதிர்ச்சியடைந்த மரங்களும் தக்கவைத்துக்கொள்ளப்படும் என்று வீவக கூறியது.