ஜி-20 சந்திப்புகளுக்காக பாலியில் துணைப் பிரதமர் வோங்

ஜி-20 சந்திப்புகளுக்காக பாலியில் துணைப் பிரதமர் வோங்

1 mins read
f3f59489-9b11-40e3-8ab4-7d5bb7a90f53
-

ஜி-20 கூட்டமைப்பு நாடுகள் பங்கேற்கும் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் பாலி சென்றுள்ளார்.

நிதி அமைச்சராகவும் உள்ள திரு வோங், அங்கு நடைபெறவுள்ள மூன்றாம் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்திலும் அது தொடர்பான நிகழ்வுகளிலும் கலந்துகொள்வார் என்று நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது.

அனைத்துலகப் பொருளியல் நிலை, கொள்ளைநோய் தொடர்பான தயார்நிலை, தற்காப்பு, செயல்பாடு மற்றும் நீடித்த நிலைத்தன்மையுடைய நித, உள்கட்டமைப்பு குறித்து 'ஜி-20' நிதி அமைச்சர்களும் மத்திய வங்கி ஆளுநர்களும் கலந்து பேசுவர் என்று கூறப்பட்டது