சிடி ஸ்கேன் சாமி; பாறைக்குள் சிக்கிய பெண்!(காணொளி)

சிடி ஸ்கேன் சாமி; பாறைக்குள் சிக்கிய பெண்!(காணொளி)

1 mins read
8ad6f7d6-57ad-4c58-b286-72981d16318a
-

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது. இது தசாவதாரம் படத்தில் வந்த பாடல்.

பொதுவாக பாறைகளைச் சாமியாகப் பாவித்து வணங்குவது இந்தியாவில் வழக்கம். ஆனால் இந்தியாவில் ஒரு பகுதியில் வித்தியாசமான பிரார்த்தனை நிகழ்வு நடந்துள்ளது.

பிரார்த்தனை செய்யப்படும் அந்த பாறை நடுவே ஒரு துளை உள்ளது. ஒல்லியாக உள்ள ஒரு மனிதரால் அந்த துளையில் புகுந்து வெளியே வந்துவிட முடியும். இந்த சாமியை வணங்குபவர்கள் அனைவரும் நல்லாசியை பெற அந்த துளையில் புகுந்து வெளியே வர வேண்டும். அப்படி செய்தால் அவர்களுக்கு நல்லது நடக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

ஆனால் பாவம் அந்த பாறைக்குள் புகுந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்தப் பெண்ணின் காணொளி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.