42 எம்ஆர்டி நிலையங்களில்  மின்படிக்கட்டு சீரமைப்புப் பணி நிறைவு

வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளைப் பயன்படுத்தும் பயணிகள், எம்ஆர்டி நிலைய மின்படிக்கட்டுகளின் இயக்கத்தில் ஏதோ வித்தியாசம் இருப்பதை உணரலாம்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் உச்ச நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் மின்படிக்கட்டுகள் இனி மெதுவான வேகத்தில் இயங்கும். அதாவது, இதுவரை வினாடிக்கு 0.75 மீட்டராக இருந்த வேகம், இனி வினாடிக்கு 0.5 மீட்டராக குறையும். முதியவர்களும் சிறாரும் மின்படிக்கட்டுகளில் பாதுகாப்பாக ஏறிச்செல்ல இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மின்படிக்கட்டுகள் எந்த திசையில் இயங்குகின்றன என்பதை அம்புக்குறிகள் காட்டும். மின்படிக்கட்டுகளுக்கும் பக்கவாட்டில் உள்ள சட்டத்துக்கும் இடையே தடுப்புகள் போடப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையில் உள்ள இடைவெளியில் பயணிகளின் கால்கள், ஆடைகள் சிக்கிக்கொள்வதை இந்தத் தடுப்புகள் தடுக்கும்.

$47.3 மில்லியன் மதிப்பிலான ஆறு ஆண்டுகால மின்படிக்கட்டு சீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் ஆகப் பழமையான 42 ரயில் நிலையங்களில் உள்ள 231 மின்படிக்கட்டுகள் கடந்த ஆறு ஆண்டுகளாக கட்டங்கட்டமாக புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

‘ஓட்டிஸ்’ எனும் ஒப்பந்த நிறுவனம் இந்தத் திட்டத்தைக் கையாண்டது. சிங்கப்பூரில் எம்ஆர்டி கட்டமைப்பு 1987ல் தொடங்கப்பட்டதில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ள பெரிய அளவிலான முதல் மின்படிக்கட்டு சீரமைப்புத் திட்டம் இது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!