மூத்த அமைச்சர் தர்மன் பெயரைப் பயன்படுத்தும் போலி இணையக் கட்டுரைகள்: காவல் துறை எச்சரிக்கை

மூத்த அமைச்சர் தர்மன் பெயரைப் பயன்படுத்தும் போலி இணையக் கட்டுரைகள்: காவல் துறை எச்சரிக்கை

1 mins read
0a4afe30-805b-44a3-8947-08a0158d62af
-

கிரிப்டோகரன்சி தானியக்கத் திட்டங்களை மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் ஆதரிப்பதாகக் கூறப்படும் போலி இணையக் கட்டுரைகளுக்கு எதிராக விழிப்பாக இருக்கும்படி காவல் துறையினர் பொதுமக்களை எச்சரிந்துள்ளனர்.

பிட்காயின் சிஸ்டம் போன்ற தானியக்க மின் வர்த்தகத்தைப் பற்றியும் அவற்றில் எந்த ஆபத்தும் இல்லை, அதிக லாபத்தை ஈட்டலாம் என்பது பற்றியும் அந்த இணையக் கட்டுரையில் இருக்கும். இவற்றை வேண்டுமென்றே 'கிளிக் பெய்ட்'(clickbait) எனும் இணைய விளம்பரங்கள் மூலம் பயனர்களின் ஆர்வத்தைத் தூண்டி வெவ்வேறு இணையத்தளங்களுக்கு வழிநடத்து வகை செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய வலைத்தளங்களுக்கு கிரிப்டோகரன்சி வர்த்தகம் அல்லது பிற நிதி அமைப்புகள் மூலம் முதலீடுகளை வழங்குகின்றன. தங்கள் தொடர்பு விவரங்களை வழங்கும் மக்கள் இந்தத் திட்டத்தின் பிரதிநிதிகளிடமிருந்து" அழைப்புகளைப் பெறுவார்கள்.

இத்தகைய இணையக் கட்டுரைகளையும் இணையத்தளங்களையும் நம்பவேண்டாம் என்று காவல் துறை கேட்டுக்கொள்கிறது. மோசடிகள் பற்றி புகார் கொடுக்க 1800-722-6688 எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது மோசடிக்கு எதிரான இணையத்தளத்தை நாடலாம்.