சிங்கப்பூரர்கள் மேலும் எளிதாக உதவி நாட புதிய திட்டம்

சிங்கப்பூரர்கள் மேலும் எளிதாக உதவி நாட புதிய திட்டம்

1 mins read
1f482303-5a65-4da2-8a2d-e3b18cecdac9
-

சிங்கப்பூரர்கள் தங்களுக்குத் தேவையான ஆதரவை நாடுவதற்குச் சிரமப்படலாம். இதுபோன்ற குறைபாடுகளைச் சரிசெய்து உதவி நாடுவதை எளிமைப்படுத்தும் நோக்கில் தன் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி நேற்று தேசிய சமூகச் சேவை மன்றம் விளக்கி இருந்தது. உதவி அமைப்பு, உதவித் திட்டம் போன்ற அணுகுமுறையிலிருந்து விலகி பயனாளர் மற்றும் குடும்பத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறைக்குத் துறை மாறவேண்டும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ குறிப்பிட்டார்.

சமூகச் சேவைகள் ஒருங்கிணைப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் உள்ள அவர், சிங்கப்பூரின் சமூகச் சேவைக் கட்டமைப்பு வலுவடைந்து வருவதாகவும் பயனுள்ளதாக வளர்ந்து உள்ளதாகவும் கூறினார். இதற்கிடையே, புதிய $5 மி. நிதித் திட்டம்வழி துறைக்குக் கூடுதல் ஆதரவு கிடைக்க உள்ளதாகக் கூறப்பட்டது.