பிலிப்பீன்சைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர், தம்முடைய முதலாளியிடம் இருந்து $64,000க்குமேல் பெறுமானமுள்ள ரொக்கம், மூன்று 'ரோலெக்ஸ்' கைக்கடிகாரங்கள், நகைகளைத் திருடினார்.
ரோஜலின் நெர்மல் நெமரியா, 43, எனும் அந்தப் பணிப்பெண், தாம் திருடிய நகைகளை ஏறக்குறைய $18,000க்கு அடகு வைத்தார். இரு கைக்கடிகாரங்களை பிலிப்பீன்சில் வசிக்கும் தம் குடும்பத்தாருக்கு அவர் அனுப்பி வைத்தார்.
தற்போது விசாரணைக் காவலில் உள்ள நெமரியா, தம் முதலாளியின் உடைமைகளைத் திருடிய குற்றத்தை நேற்று ஒப்புக் கொண்டார். தம் குடும்பத்தாரிடமிருந்து கைக்கடிகாரங்களை மீட்க நெமரியாவுக்கு அவகாசம் வழங்க மாவட்ட நீதிபதி இந்த வழக்கை ஆகஸ்ட் 17க்கு ஒத்திவைத்துள்ளார்.

