சிங்கப்பூரில் 16,870 பேருக்கு கொவிட்-19 தொற்று

சிங்கப்பூரில் 16,870 பேருக்கு கொவிட்-19 தொற்று

1 mins read
a44d3a35-235d-43ba-9214-9d4b3807a0a0
படம்: ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் புதன்கிழமை (ஜூலை 13) புதிதாக 16,870 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை அன்று பதிவான 5,979 சம்பவங்களைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்.

நீண்ட வாரயிறுதி காரணமான தொற்று எண்ணிக்கை அதிகரித்ததாக சுகாதார அமைச்சு கூறியது. கடந்த ஏழு நாள்களாக ஒவ்வொரு நாளும் சராசரியாக 8,400 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டது.

கொவிட்-19க்காக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 734ஆக உள்ளது. இவர்களில் 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 90 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

கொவிட்-19 தொற்று காரணமாக மேலும் மூவர் உயிரிழந்தார்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 892 பேருக்குத் தொற்று உறுதியானது.

வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் 1.01ஆக இருந்தது. அதற்கு முந்தைய நாள் அது 0.91 ஆக இருந்தது.

சிங்கப்பூரில் மொத்தம் 1,557,648 தொற்றுச் சம்பவங்களும், 1,440 தொற்றுப் பாதிப்பால் மரணங்களும் பதிவாகியுள்ளன.