சிங்கப்பூரில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று

சிங்கப்பூரில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று

1 mins read
8d92f763-f7b1-444f-8a6a-3f4654662c63
படம்: ராய்ட்டர்ஸ் -

உள்ளூரில் இரண்டாவது குரங்கம்மை தொற்று சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் ஐந்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூரில் வசிக்கும் 48 வயது பிரிட்டி‌ஷ் ஆடவரிடம் குரங்கம்மை நோய்த்தொற்று அறிகுறிகள் காணப்பட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர் தற்போது தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று சீரான நிலையில் உள்ளதார்.

ஆடவரிடம் முதன்முதலில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 6) அறிகுறிகள் தென்பட்டன. அவரது ஆசனவாய் பகுதியில் சோறி தென்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 11ஆம் தேதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இந்த ஆடவருக்கும் சிங்கப்பூரில் குரங்கம்மை இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட மற்ற ஆடவர்களுக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சு குறிப்பிட்டது.

63 நாடுகளில் 9,200 குரங்கம்மை சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.